நியாயமான காரணமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
பாடசாலையில் அனுமதி பெற்றிருந்த போதிலும், எவ்வித நியாயமான காரணமும் இன்றி நீண்டகாலமாக பாடசாலைக்குச் செல்லாமல் இருந்த 30க்கும் மேற்பட்ட பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளில் இணைத்து அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இதற்கமைய, குறித்த பிள்ளைகளை சிங்கள, இந்து மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் மீள இணைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று (05) மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட பாடசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பிள்ளைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், பொலிஸாரின் தலையீட்டுடன் அவர்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு மீண்டும் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நியாயமான காரணமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராண்ட்பாஸ் பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.
மேலும், குறித்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக நாளாந்த தகவல்களைப் பெற்று விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தவறினால் என்ன நடக்கும் இலங்கைப் பெற்றோருக்கு கடும் எச்சரிக்கை நியாயமான காரணமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.பாடசாலையில் அனுமதி பெற்றிருந்த போதிலும், எவ்வித நியாயமான காரணமும் இன்றி நீண்டகாலமாக பாடசாலைக்குச் செல்லாமல் இருந்த 30க்கும் மேற்பட்ட பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளில் இணைத்து அவர்களின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை கிராண்ட்பாஸ் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.இதற்கமைய, குறித்த பிள்ளைகளை சிங்கள, இந்து மற்றும் முஸ்லிம் பாடசாலைகளில் மீள இணைப்பதற்கான நடவடிக்கைகள் நேற்று (05) மேற்கொள்ளப்பட்டுள்ளன.சம்பந்தப்பட்ட பாடசாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடி, பிள்ளைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொண்ட பின்னர், பொலிஸாரின் தலையீட்டுடன் அவர்களுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டு மீண்டும் வகுப்பறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், நியாயமான காரணமின்றி தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பத் தவறும் பெற்றோருக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கிராண்ட்பாஸ் பொலிஸார் கடுமையாக எச்சரித்துள்ளனர்.மேலும், குறித்த பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதையும் அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, சம்பந்தப்பட்ட பாடசாலைகள் ஊடாக நாளாந்த தகவல்களைப் பெற்று விசேட கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.