• Sep 22 2024

கந்தக்காடு பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என்ன? ஆரம்பிக்கப்படும் அவசர வேலைத்திட்டம்!

Chithra / Jan 28th 2024, 3:17 pm
image

Advertisement

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முரண்பாடான சம்பவங்களை கட்டுப்படுத்த அவசர வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களும் புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுவதே இது தொடர்பான முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் 2 தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் பதிவாகின.

தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் இதற்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டுமெனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு பிரச்சினைகளுக்கு பிரதான காரணம் என்ன ஆரம்பிக்கப்படும் அவசர வேலைத்திட்டம் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முரண்பாடான சம்பவங்களை கட்டுப்படுத்த அவசர வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டு வருவதாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் கடத்தல்காரர்களும் புனர்வாழ்வு நிலையங்களில் அனுமதிக்கப்படுவதே இது தொடர்பான முரண்பாடுகளுக்கு பிரதான காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஜனவரி மாதத்தில் 2 தடவைகள் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் கைதிகளுக்கு இடையில் மோதல் சம்பவங்கள் பதிவாகின.தற்போது நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் இதற்கு நீண்டகால தீர்வு காணப்பட வேண்டுமெனவும் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement