நாட்டில் வாட்ஸ்அப் கணக்கு ஊடுருவல் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த வாரங்களில் மாத்திரம் இது தொடர்பில் சுமார் 74 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தெரிந்த ஒருவரின் இலக்கத்தினூடாக அல்லது தெரியாத இலக்கத்திலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்பினூடாக அல்லது ஒன்லைன் கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளினூடாக இந்த ஊடுருவல் இடம்பெறுவதாக அவர் கூறினார்.
ஹேக்கர்கள் பின்னர் பயனர்களிடம் சரிபார்ப்புக் குறியீட்டைக் கேட்கிறார்கள், இது அவர்களின் கணக்குகளுக்கான அணுகலைப் பெற பயன்படுகிறது.
எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய அழைப்புக்களினூடாக, வாட்ஸ் அப் குறுஞ்செய்தியினூடாக கோரப்படும் குறியீட்டு இலக்கங்களை (OTP) வழங்க வேண்டாமென இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வாறு வாட்ஸ் அப் ஊடுருவப்பட்டால் உடனடியாக வாட்ஸ் அப் கணக்கை அழித்துவிட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் இந்த சிக்கலை விரைவில் நிவர்த்திக்க முடியுமெனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாட்டில் 'ஹேக்' செய்யப்படும் வாட்ஸ்அப் கணக்குகள் - அதிகரித்த முறைப்பாடுகள் நாட்டில் வாட்ஸ்அப் கணக்கு ஊடுருவல் தொடர்பில் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாகத் இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு தெரிவித்துள்ளது.கடந்த வாரங்களில் மாத்திரம் இது தொடர்பில் சுமார் 74 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக மூத்த தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருகா தமுனுபொல தெரிவித்தார்.பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தெரிந்த ஒருவரின் இலக்கத்தினூடாக அல்லது தெரியாத இலக்கத்திலிருந்து மேற்கொள்ளப்படும் அழைப்பினூடாக அல்லது ஒன்லைன் கலந்துரையாடல்களில் பங்கேற்குமாறு வரும் வாட்ஸ் அப் குறுஞ்செய்திகளினூடாக இந்த ஊடுருவல் இடம்பெறுவதாக அவர் கூறினார்.ஹேக்கர்கள் பின்னர் பயனர்களிடம் சரிபார்ப்புக் குறியீட்டைக் கேட்கிறார்கள், இது அவர்களின் கணக்குகளுக்கான அணுகலைப் பெற பயன்படுகிறது.எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இத்தகைய அழைப்புக்களினூடாக, வாட்ஸ் அப் குறுஞ்செய்தியினூடாக கோரப்படும் குறியீட்டு இலக்கங்களை (OTP) வழங்க வேண்டாமென இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.அவ்வாறு வாட்ஸ் அப் ஊடுருவப்பட்டால் உடனடியாக வாட்ஸ் அப் கணக்கை அழித்துவிட்டு மீண்டும் பதிவிறக்கம் செய்துகொள்வதன் மூலம் இந்த சிக்கலை விரைவில் நிவர்த்திக்க முடியுமெனவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.