• Sep 29 2024

இராணுவத்திடம் கையளித்த எங்களது உறவுகள் எங்கே? முல்லையில் தாய்மார்கள் கண்ணீர்...!

Sharmi / Jun 26th 2024, 2:16 pm
image

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டத்தை முன்னெடுத்துவரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (26) முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்

வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும். எங்கே எங்கே உறவுகள் எங்கே?. இராணுவத்திடம் கையளித்த எங்களது உறவுகள் எங்கே?.  வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும்,  கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா? காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, உங்கள் இராணுவத்தை நம்பி கையில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்

குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  ஐ.நா சபையில் எமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நீதி கோரி போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் .

தமது பிள்ளைகளை உறவுகளை தேடிக்கொண்டிருக்கும்  பெற்றோர்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் ஓ.எம்.பி அலுவலகத்தினால் நட்டஈடு கொடுத்து மரண சான்றிதழும் கொடுக்கும் ஏற்பாடுகள் மக்களை விரட்டி விரட்டி செய்கின்றார்கள்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்  ஊடாகவும் கிராம அமைப்புக்கள் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுத்தும் மக்களை மிரட்டுகின்றார்கள்.

இந்த பதிவுகள் செய்யாவிடின் எந்த ஒரு அரச பதிவுகளும் உதவிகளும் தரமுடியாது என்று பயங்கரமான மிரட்டல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.

இந்த மிரட்டல்களை தாண்டி எமக்கான நீதி கிடைக்கவேண்டும், சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும், குற்றம் புரிந்தவர்களை சர்வதேச கூண்டில் ஏற்றி நீதி கிடைக்கவேண்டும்,எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்றுதான் போராடி வருகின்றோம் எமக்கான நீதியினை சர்வதேசம் மட்டும்தான் தரவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

இராணுவத்திடம் கையளித்த எங்களது உறவுகள் எங்கே முல்லையில் தாய்மார்கள் கண்ணீர். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக நீதி கோரி போராட்டத்தை முன்னெடுத்துவரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (26) முல்லைத்தீவு நகர சுற்றுவட்டத்தில் நீதிகோரிய கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும். எங்கே எங்கே உறவுகள் எங்கே. இராணுவத்திடம் கையளித்த எங்களது உறவுகள் எங்கே.  வேண்டாம் வேண்டாம் ஓ.எம்.பி வேண்டாம் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும்,  கொலைகாரனால் நீதி வழங்க முடியுமா காணாமல் போனவர்களின் குடும்பங்களை மிரட்டுவதையும் அச்சுறுத்துவதையும் நிறுத்துங்கள், கொடுப்பனவுகளை கொடுப்போம் என்று சொல்வது கொலை செய்த கதையை மறைக்கவே, உங்கள் இராணுவத்தை நம்பி கையில் ஒப்படைத்த எங்கள் பிள்ளைகள் எப்படி காணாமல் ஆக்கப்பட்டார்கள் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில்  ஈடுபட்டிருந்தனர்குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், சர்வதேசத்திடம் நீதி கோரி போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம்.  ஐ.நா சபையில் எமது பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நீதி கோரி போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றோம் .தமது பிள்ளைகளை உறவுகளை தேடிக்கொண்டிருக்கும்  பெற்றோர்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள். இலங்கையில் ஓ.எம்.பி அலுவலகத்தினால் நட்டஈடு கொடுத்து மரண சான்றிதழும் கொடுக்கும் ஏற்பாடுகள் மக்களை விரட்டி விரட்டி செய்கின்றார்கள்.வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தொடர்ச்சியாக கிராம உத்தியோகத்தர்  ஊடாகவும் கிராம அமைப்புக்கள் ஊடாகவும் அழுத்தங்கள் கொடுத்தும் மக்களை மிரட்டுகின்றார்கள். இந்த பதிவுகள் செய்யாவிடின் எந்த ஒரு அரச பதிவுகளும் உதவிகளும் தரமுடியாது என்று பயங்கரமான மிரட்டல் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்து கொண்டிருக்கின்றது.இந்த மிரட்டல்களை தாண்டி எமக்கான நீதி கிடைக்கவேண்டும், சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டும், குற்றம் புரிந்தவர்களை சர்வதேச கூண்டில் ஏற்றி நீதி கிடைக்கவேண்டும்,எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்றுதான் போராடி வருகின்றோம் எமக்கான நீதியினை சர்வதேசம் மட்டும்தான் தரவேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

Advertisement