• Mar 16 2026

இலங்கையின் கடற்பாதுகாப்பு யார் கையில்? தீவகத்துக்குள் தினமும் நுழையும் இந்திய மீனவர்கள்!

Chithra / Feb 1st 2026, 12:52 pm
image


 

யாழ்ப்பாணம் - நயினாதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையேயான கடற்பகுதியில் இந்திய இழுவை மடிப்படகுகள்  அத்துமீறிய மீன்டியில் தினமும் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 


இந்நிலையில் நேற்றிரவும் நயினாதீவு கடலுக்குள் உள்நுழைந்த இந்திய மீனவர்கள் இழுவை மடிப்படகில் அத்துமீறிய மீன்டியில் ஈடுபட்டுள்ளனர். 


இச் சம்பவத்தை நேரடியாக வீடியோ அழைப்பு மூலம் யாழ்ப்பாண இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நயினாதீவு மீனவர்களால் காண்பிக்கப்பட்டது.


இதுதொடர்பில் யாழ். மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் 


எமது கடல் வளத்தை இந்திய மீனவர்கள்  அழிப்பதுடன், நயினாதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருவகின்றனர். பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். 


இலங்கை அரசு மீனவர் விடயத்தில் அக்கறையீனமாக செயற்படுகின்றது.


இலங்கையின் கடற்பாதுகாப்பை மீறி எவ்வாறு இந்திய இழுவை மடிப்படகுகள் தீவகத்துக்குள் நுழைகின்றது?இலங்கையின் கடற்பாதுகாப்பு யார் கையில் என்பது புரியாத புதிராக உள்ளது என தெரிவித்துள்ளனர். 

இலங்கையின் கடற்பாதுகாப்பு யார் கையில் தீவகத்துக்குள் தினமும் நுழையும் இந்திய மீனவர்கள்  யாழ்ப்பாணம் - நயினாதீவுக்கும் நெடுந்தீவுக்கும் இடையேயான கடற்பகுதியில் இந்திய இழுவை மடிப்படகுகள்  அத்துமீறிய மீன்டியில் தினமும் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்றிரவும் நயினாதீவு கடலுக்குள் உள்நுழைந்த இந்திய மீனவர்கள் இழுவை மடிப்படகில் அத்துமீறிய மீன்டியில் ஈடுபட்டுள்ளனர். இச் சம்பவத்தை நேரடியாக வீடியோ அழைப்பு மூலம் யாழ்ப்பாண இந்திய தூதரக அதிகாரிகளுக்கு நயினாதீவு மீனவர்களால் காண்பிக்கப்பட்டது.இதுதொடர்பில் யாழ். மீனவர்கள் கருத்து தெரிவிக்கையில் எமது கடல் வளத்தை இந்திய மீனவர்கள்  அழிப்பதுடன், நயினாதீவு, நெடுந்தீவு, புங்குடுதீவு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருவகின்றனர். பொருள் சேதத்தையும் ஏற்படுத்தி வருகின்றனர். இலங்கை அரசு மீனவர் விடயத்தில் அக்கறையீனமாக செயற்படுகின்றது.இலங்கையின் கடற்பாதுகாப்பை மீறி எவ்வாறு இந்திய இழுவை மடிப்படகுகள் தீவகத்துக்குள் நுழைகின்றதுஇலங்கையின் கடற்பாதுகாப்பு யார் கையில் என்பது புரியாத புதிராக உள்ளது என தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement