வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.
உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகரசபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பில் கட்சிகளிற்கு இடையில் இழுபறி நிலை ஏற்றப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்று கூடியுள்ளனர்.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ப.சத்தியலிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
உள்ளூராட்சி சபைகளில் யார் ஆட்சியமைப்பது வவுனியாவில் ஒன்றுகூடிய தமிழ் கட்சிகள். வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும், இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது.உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகரசபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பில் கட்சிகளிற்கு இடையில் இழுபறி நிலை ஏற்றப்பட்டுள்ளது.இந்தநிலையில் அவ்விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்று கூடியுள்ளனர்.ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரன் ஏற்பாட்டில் இடம்பெற்றுவரும் இக்கலந்துரையாடலில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,ப.சத்தியலிங்கம்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் மோகன், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.