• Jul 01 2024

2024 T20 உலக கிண்ணத்தை வெல்லப்போவது யார் - இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள்

Tharun / Jun 29th 2024, 3:58 pm
image

Advertisement

2024 ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

குறித்த போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி இன்றிரவு (29) 8:00 மணிக்கு பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது.

கடந்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), 50 ஓவர் உலகக்கிண்ணத் தொடர் (2023), தற்போது 'டி-20' உலகக்கிண்ணத் தொடர் என மூன்று 'உலக' இறுதிப்போட்டிகளில் அணியை வழிநடத்தும் முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை பெறுகிறார் ரோகித் சர்மா.

தென்னாபிரிக்காவும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஐ.சி.சி., 'நாக்-அவுட்' போட்டிகளில் சொதப்புவதால், 'சோக்கர்ஸ்' என கேலி செய்தனர்.  இம்முறை அபாரமாக செயல்பட்டு, விமர்சனங்களை தகர்த்து இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.

2024 T20 உலக கிண்ணத்தை வெல்லப்போவது யார் - இறுதிப்போட்டியில் மோதும் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் 2024 ரி20 உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.குறித்த போட்டி பார்படோஸில் இலங்கை நேரப்படி இன்றிரவு (29) 8:00 மணிக்கு பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.'நடப்பு சாம்பியன்' இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் உள்ளிட்ட முன்னணி அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.இந்திய அணி அனைத்து போட்டிகளிலும் வென்ற உற்சாகத்தில் களமிறங்குகிறது.கடந்த 12 மாதங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (2023), 50 ஓவர் உலகக்கிண்ணத் தொடர் (2023), தற்போது 'டி-20' உலகக்கிண்ணத் தொடர் என மூன்று 'உலக' இறுதிப்போட்டிகளில் அணியை வழிநடத்தும் முதல் இந்திய அணித்தலைவர் என்ற பெருமை பெறுகிறார் ரோகித் சர்மா.தென்னாபிரிக்காவும் அசைக்க முடியாத அணியாக திகழ்கிறது. ஐ.சி.சி., 'நாக்-அவுட்' போட்டிகளில் சொதப்புவதால், 'சோக்கர்ஸ்' என கேலி செய்தனர்.  இம்முறை அபாரமாக செயல்பட்டு, விமர்சனங்களை தகர்த்து இறுதிப் போட்டி வரை முன்னேறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement