மலையக மக்கள் பிரதிநிதிகள் எதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வியெழுப்பியுள்ளார்.
பெருந்தோட்ட அமைச்சு மீதான விவாதத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலைச்செல்வியின் உரை தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மலையகத்தை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கூறினீர்கள்.
எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்? 1948 ஆம் ஆண்டு எங்களுடைய சமூகத்தை நாடற்ற சமூகமாக மாற்றினார்கள். அதற்கு யாராவது மன்னிப்புக் கேட்டார்களா? 1964 தொடக்கம் 1989 வரை மாடு போல எங்களை நாடு கடத்தினார்கள்.
இன்றைக்கு நாம் இந்திய அரசாங்கத்துக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் எவரும் இந்தியாவிடம் போய்ப் பிச்சை கேட்கவில்லை. இந்திய அரசாங்கம் எங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து இருபத்தோராயிரம் நபர்களை நாடு கடத்தினார்கள். அதற்கு யார் மன்னிப்பு கேட்க போகிறார்கள்?
உங்கள் அனைவரையும் இன்று இந்த ஆசனத்தில் உட்கார வைத்திருப்பது மலையக ஆசிரியர் சமூகங்கள். மலையகத்தில் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியை யார் கொண்டு வந்தார்கள்? அதற்கு மன்னிப்புக் கேட்கச் சொல்கிறீர்களா ?என கேள்வியெழுப்பினார்.
'ஏன் மன்னிப்பு கேக்கணும்' கலைச்செல்வியின் கருத்தால் கொந்தளித்த ஜீவன் மலையக மக்கள் பிரதிநிதிகள் எதற்காக மன்னிப்புக் கேட்கவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வியெழுப்பியுள்ளார்.பெருந்தோட்ட அமைச்சு மீதான விவாதத்தின் போது தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் கலைச்செல்வியின் உரை தொடர்பாக பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.மலையகத்தை இதுவரை பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மலையக மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் எனக் கூறினீர்கள். எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும் 1948 ஆம் ஆண்டு எங்களுடைய சமூகத்தை நாடற்ற சமூகமாக மாற்றினார்கள். அதற்கு யாராவது மன்னிப்புக் கேட்டார்களா 1964 தொடக்கம் 1989 வரை மாடு போல எங்களை நாடு கடத்தினார்கள். இன்றைக்கு நாம் இந்திய அரசாங்கத்துக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் எவரும் இந்தியாவிடம் போய்ப் பிச்சை கேட்கவில்லை. இந்திய அரசாங்கம் எங்களை கவனத்தில் எடுக்க வேண்டும். இந்திய அரசாங்கமும் இலங்கை அரசாங்கமும் சேர்ந்து கிட்டத்தட்ட இரண்டு லட்சத்து இருபத்தோராயிரம் நபர்களை நாடு கடத்தினார்கள். அதற்கு யார் மன்னிப்பு கேட்க போகிறார்கள் உங்கள் அனைவரையும் இன்று இந்த ஆசனத்தில் உட்கார வைத்திருப்பது மலையக ஆசிரியர் சமூகங்கள். மலையகத்தில் ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியை யார் கொண்டு வந்தார்கள் அதற்கு மன்னிப்புக் கேட்கச் சொல்கிறீர்களா என கேள்வியெழுப்பினார்.