• Jan 13 2026

மீனவர்கள் பிரச்சினைகளுக்கு இந்திய பிரதமர், முதலமைச்சர், தமிழ் அரசியல் வாதிகள் மௌனம் காப்பது ஏன்!

shanuja / Jan 12th 2026, 6:19 pm
image

மீனவர்கள் பிரச்சினைகளுக்கு  பிரதமர், முதலமைச்சர், தமிழ் அரசியல் வாதிகள் ஏன் மௌனம் காக்கின்றார்கள் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஐனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா கேள்வியெழுப்பியுள்ளார். 


யாழில் இன்று  ஊடக சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கல்விச்சீர்திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியை எதிர்த்து தனித்துவமாக குரல் கொடுத்த தமிழர்தரப்பிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 


ஆனால் இந்த விடயத்தில் எதிர்த்துக் குரல்கொடுத்த தமிழர் தரப்புக்கள் ஏன் மீனவர்களின் பிரச்சினைகளில் மௌனம் காக்கின்றனர். 


இன்றுவரை தமிழக மீனவர்களின் அத்துமீறல்களும் இழுவைமடிகளும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த விடயத்திற்கு உரிய சமஷ்டித் தீர்வு கோரி தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும். 


இதன் போது பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ள தீர்மானம் மற்றும் தையிட்டி விகாரை விவகாரம், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

மீனவர்கள் பிரச்சினைகளுக்கு இந்திய பிரதமர், முதலமைச்சர், தமிழ் அரசியல் வாதிகள் மௌனம் காப்பது ஏன் மீனவர்கள் பிரச்சினைகளுக்கு  பிரதமர், முதலமைச்சர், தமிழ் அரசியல் வாதிகள் ஏன் மௌனம் காக்கின்றார்கள் என அடக்கு முறைகளுக்கு எதிரான ஐனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா கேள்வியெழுப்பியுள்ளார். யாழில் இன்று  ஊடக சந்திப்பொன்றை நடத்தி அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கல்விச்சீர்திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சியை எதிர்த்து தனித்துவமாக குரல் கொடுத்த தமிழர்தரப்பிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் இந்த விடயத்தில் எதிர்த்துக் குரல்கொடுத்த தமிழர் தரப்புக்கள் ஏன் மீனவர்களின் பிரச்சினைகளில் மௌனம் காக்கின்றனர். இன்றுவரை தமிழக மீனவர்களின் அத்துமீறல்களும் இழுவைமடிகளும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இந்த விடயத்திற்கு உரிய சமஷ்டித் தீர்வு கோரி தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும். இதன் போது பிரதமருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ள தீர்மானம் மற்றும் தையிட்டி விகாரை விவகாரம், காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement