• Sep 20 2024

சுதந்திர தினத்தன்று எதற்காக காந்திக் குல்லாய் அணிந்தார்கள் - சந்தேகம் எழுப்பியுள்ள நிலாந்தன்!

Tamil nila / Feb 12th 2023, 11:25 am
image

Advertisement

கறுப்புக்கொடி ஏந்துமாறு தூண்டிய தமிழ் மிதவாதிகளின் வழிவந்தவர்கள் பின்னாளில் தாங்களே சுதந்திரதின விழாவில் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி அசைத்திருந்ததாக அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.


கொல்லப்பட்ட நடராசனை அதைவிடக் கேவலமாக அவமதிக்கமுடியாது என்றும் அவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலகட்டத்தில், சுதந்திரதின விழாவில் பங்குபற்றிய தமிழ்த் தலைவர்கள், இப்பொழுது மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் காந்திக் குல்லாயும் கறுப்புக் கொடியுமாக நிற்பதாக நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.


அவர்கள் எதற்காக காந்திக் குல்லாய் அணிந்தார்கள் என்று தெரியவில்லை என்றும் ஆனால் அவர்களுடைய நடப்பு அரசியலை வைத்து பார்க்கும்போது, அவர்களுடைய தோற்றம் வினோத உடைப் போட்டியில் வேசமிட்டு வந்தவர்களைப்போல காணப்பட்டதாக நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.


அவர்கள் விதவிதமான வினோத உடைகளை அணிந்து தமிழ் மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள்.

ஒருபுறம் தமிழ் அரசியல்வாதிகள், அரசியலை வினோத உடைப் போட்டியாக மாற்றுகிறார்கள், இன்னொருபுறம் ஜனாதிபதி ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு தருவேன் என்கிறார்.


கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பொலீஸ் அதிகாரம் தொடர்பில் இப்போதுள்ள நிலைமைகளில் மாற்றம் இல்லை என்று ரணில் கூறியதாக தெரிவித்தார் நிலாந்தன். 

அதாவது 13 மைனஸ்? அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு போலீஸ் அதிகாரத்தைப் பெறும் சுதந்திரம் இல்லை என்றும் நிலாந்தன் சுட்டிக்காட்டினார்.


ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வைப் பெறும் சுதந்திரந்தான் உண்டு. ஆனால் அதைக் கூறியது யாரென்றால் சுதந்திரமில்லாத ஒரு நாட்டின் தலைவர் என்றும் நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திர தினத்தன்று எதற்காக காந்திக் குல்லாய் அணிந்தார்கள் - சந்தேகம் எழுப்பியுள்ள நிலாந்தன் கறுப்புக்கொடி ஏந்துமாறு தூண்டிய தமிழ் மிதவாதிகளின் வழிவந்தவர்கள் பின்னாளில் தாங்களே சுதந்திரதின விழாவில் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி அசைத்திருந்ததாக அரசியல் ஆய்வாளரான நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.கொல்லப்பட்ட நடராசனை அதைவிடக் கேவலமாக அவமதிக்கமுடியாது என்றும் அவ்வாறு ரணில் விக்கிரமசிங்கவின் நல்லாட்சி காலகட்டத்தில், சுதந்திரதின விழாவில் பங்குபற்றிய தமிழ்த் தலைவர்கள், இப்பொழுது மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் காந்திக் குல்லாயும் கறுப்புக் கொடியுமாக நிற்பதாக நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.அவர்கள் எதற்காக காந்திக் குல்லாய் அணிந்தார்கள் என்று தெரியவில்லை என்றும் ஆனால் அவர்களுடைய நடப்பு அரசியலை வைத்து பார்க்கும்போது, அவர்களுடைய தோற்றம் வினோத உடைப் போட்டியில் வேசமிட்டு வந்தவர்களைப்போல காணப்பட்டதாக நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.அவர்கள் விதவிதமான வினோத உடைகளை அணிந்து தமிழ் மக்களைக் கவர முயற்சிக்கிறார்கள்.ஒருபுறம் தமிழ் அரசியல்வாதிகள், அரசியலை வினோத உடைப் போட்டியாக மாற்றுகிறார்கள், இன்னொருபுறம் ஜனாதிபதி ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு தருவேன் என்கிறார்.கடந்த 8ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் பொலீஸ் அதிகாரம் தொடர்பில் இப்போதுள்ள நிலைமைகளில் மாற்றம் இல்லை என்று ரணில் கூறியதாக தெரிவித்தார் நிலாந்தன். அதாவது 13 மைனஸ் அதை இன்னும் கூர்மையாகச் சொன்னால் தமிழ் மக்களுக்கு போலீஸ் அதிகாரத்தைப் பெறும் சுதந்திரம் இல்லை என்றும் நிலாந்தன் சுட்டிக்காட்டினார்.ஒற்றையாட்சிக்கு உட்பட்ட ஒரு தீர்வைப் பெறும் சுதந்திரந்தான் உண்டு. ஆனால் அதைக் கூறியது யாரென்றால் சுதந்திரமில்லாத ஒரு நாட்டின் தலைவர் என்றும் நிலாந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement