• Jan 19 2025

மண்வெட்டியால் மனைவி அடித்துக் கொலை; கணவன் தப்பியோட்டம்

Chithra / Jan 1st 2025, 1:11 pm
image

 

குருநாகல், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹருப்ப பிரதேசத்தில் கணவனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

கொலை செய்யப்பட்டவர் திகல்ல, பரகஹருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மனைவி ஆவார்.

கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த மனைவி குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தையடுத்து, சந்தேகநபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மண்வெட்டியால் மனைவி அடித்துக் கொலை; கணவன் தப்பியோட்டம்  குருநாகல், குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பரகஹருப்ப பிரதேசத்தில் கணவனால் மண்வெட்டியால் தாக்கப்பட்டு மனைவி கொலை செய்யப்பட்டுள்ளதாக குளியாப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.கொலை செய்யப்பட்டவர் திகல்ல, பரகஹருப்ப பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய மனைவி ஆவார்.கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தாக்குதலில் காயமடைந்த மனைவி குளியாப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சம்பவத்தையடுத்து, சந்தேகநபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement