• Sep 17 2024

வேட்புமனுவில் கையெழுத்திட்டனர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீர

Chithra / Aug 14th 2024, 11:35 am
image

Advertisement


ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (14) காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் விஜயதாச ராஜபக்ஷ, நாவலலில் உள்ள அவரது வீட்டில் வைத்து வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாக ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சஜித் பிரேமதாசவுக்கு மைத்திரிபால சிறிசேனா ஆதரவளிப்பாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த விஜயதாச ராஜபக்ஷ,

''அப்படி ஒரு செய்தி உள்ளது. அவருடைய ஆதரவு கிடைக்கும். கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். இல்லை என்றால் வருவதற்கு முகம்கொடுப்பேன்'. என்றார்.  

 

இதேவேளை  சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே  திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இதன்போது, ​​சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூவ் குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான  திலித் ஜயவீரவுக்கான கட்டுப்பபணம் நேற்று (13) செலுத்தப்பட்டது.

திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

வேட்புமனுவில் கையெழுத்திட்டனர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் திலித் ஜயவீர ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ஷ இன்று (14) காலை வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.மகாசங்கத்தினரின் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் விஜயதாச ராஜபக்ஷ, நாவலலில் உள்ள அவரது வீட்டில் வைத்து வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.தேசிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் கட்டுப்பணத்தை செலுத்தினார்.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவுடன் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அவர் போட்டியிடவுள்ளதாக ஆரம்பத்திலேயே தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், சஜித் பிரேமதாசவுக்கு மைத்திரிபால சிறிசேனா ஆதரவளிப்பாரா என்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்டதற்கு, அதற்கு பதிலளித்த விஜயதாச ராஜபக்ஷ,''அப்படி ஒரு செய்தி உள்ளது. அவருடைய ஆதரவு கிடைக்கும். கிடைத்தால் ஏற்றுக்கொள்வேன். இல்லை என்றால் வருவதற்கு முகம்கொடுப்பேன்'. என்றார்.   இதேவேளை  சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளரான திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.பொரளையில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போதே  திலித் ஜயவீர தனது வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார்.இதன்போது, ​​சர்வஜன அதிகாரத்தின் கட்சித் தலைவர்களான வாசுதேவ நாணயக்கார, டியூவ் குணசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, கெவிந்து குமாரதுங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், சர்வஜன அதிகாரத்தின் ஜனாதிபதி வேட்பாளருமான  திலித் ஜயவீரவுக்கான கட்டுப்பபணம் நேற்று (13) செலுத்தப்பட்டது.திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலில் நட்சத்திர சின்னத்தில் போட்டியிடுகின்றமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement