• Nov 11 2024

கிளிநொச்சியில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம்...! அச்சத்துடன் வாழும் மக்கள்...!

Sharmi / May 27th 2024, 3:59 pm
image

காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக கல்மடு மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர்- ரங்கன் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மக்களால் வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தென்னை, பலா, மரவள்ளி, வாழை போன்ற பலன் தரக்கூடிய நிலையில் உள்ள பயிர்களை தினமும் பகுதியாக சென்று காட்டு யானைகள் அழித்து வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.

இதன் காரணமாக வீட்டிவிருந்து மாலை 5 மணிக்கு பின்னர் வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்ப முடியாத அச்ச நிலை தோற்றியுள்ளதாகவும், வீட்டில் இருப்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத  நிலை தோற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

காட்டு யானைகள் மக்களை துரத்தி வருவதாகவும், இதன் காரணமாக இரவு வேளைகளில் நித்திரையின்றி காட்டு யானைகளுக்கு காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.


கிளிநொச்சியில் தொடரும் காட்டு யானைகளின் அட்டகாசம். அச்சத்துடன் வாழும் மக்கள். காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக கல்மடு மக்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்மடுநகர்- ரங்கன் குடியிருப்பு பகுதியில் நேற்றைய தினம் மக்கள் குடியிருப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் மக்களால் வாழ்வாதாரத்திற்காக மேற்கொள்ளப்பட்டிருந்த தென்னை, பலா, மரவள்ளி, வாழை போன்ற பலன் தரக்கூடிய நிலையில் உள்ள பயிர்களை தினமும் பகுதியாக சென்று காட்டு யானைகள் அழித்து வருவதாக மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.இதன் காரணமாக வீட்டிவிருந்து மாலை 5 மணிக்கு பின்னர் வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்ப முடியாத அச்ச நிலை தோற்றியுள்ளதாகவும், வீட்டில் இருப்பவர்கள் வெளியிடங்களுக்கு செல்ல முடியாத  நிலை தோற்றியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.காட்டு யானைகள் மக்களை துரத்தி வருவதாகவும், இதன் காரணமாக இரவு வேளைகளில் நித்திரையின்றி காட்டு யானைகளுக்கு காவல் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement