திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்திற்குள் இன்று (13) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், பயிர்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகளைச் சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் தென்னை, வாழை உள்ளிட்ட பயன்தரும் பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன், வீடுகள் மற்றும் காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ச்சியாக நிலவும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலால், இரவு நேரங்களில் மாத்திரமன்றி பகல் வேளைகளிலும் தமது பிள்ளைகளை வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது பெரும் சவாலாக மாறியுள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, காட்டு யானைகளின் நடமாட்டத்தால் தமது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட வாழ்க்கையை நிம்மதியாக முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே, காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், கிராமத்திற்குள் புகும் யானைகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதூர் – கிளிவெட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூதூரில் அதிகாலை ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – பயிர்கள், பாதுகாப்பு வேலிகள் சேதம் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிளிவெட்டி கிராமத்திற்குள் இன்று (13) அதிகாலை புகுந்த காட்டு யானைகள், பயிர்கள் மற்றும் பாதுகாப்பு வேலிகளைச் சேதப்படுத்தியுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.கிராமத்திற்குள் புகுந்த காட்டு யானைகள், பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் தென்னை, வாழை உள்ளிட்ட பயன்தரும் பயிர்களைச் சேதப்படுத்தியுள்ளதுடன், வீடுகள் மற்றும் காணிகளைச் சுற்றி அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேலிகளையும் சேதப்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.தொடர்ச்சியாக நிலவும் காட்டு யானைகளின் அச்சுறுத்தலால், இரவு நேரங்களில் மாத்திரமன்றி பகல் வேளைகளிலும் தமது பிள்ளைகளை வீடுகளில் பாதுகாப்பாக வைத்திருப்பது பெரும் சவாலாக மாறியுள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.குறிப்பாக, காட்டு யானைகளின் நடமாட்டத்தால் தமது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், அன்றாட வாழ்க்கையை நிம்மதியாக முன்னெடுக்க முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.எனவே, காட்டு யானைகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதைத் தடுப்பதற்கும், கிராமத்திற்குள் புகும் யானைகளைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மூதூர் – கிளிவெட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.