• Oct 06 2026

ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத்தண்டனையா? நீதிமன்றம் முக்கிய உத்தரவு

Chithra / Oct 5th 2026, 12:57 pm
image


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.


ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


சிறைத்தண்டனையை அமுல்படுத்துவதற்காக ஞானசார தேரரை கைது செய்ய முன்னதாக திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.


நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.


அதற்கமைய, முன்னதாக விதிக்கப்பட்ட 6 வருட கடூழிய சிறைத் தண்டனையில் எஞ்சி இருக்க கூடிய 5 வருடங்களையும் மீள தண்டனைக் காலமாக உறுதிப்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஞானசார தேரருக்கு மீண்டும் சிறைத்தண்டனையா நீதிமன்றம் முக்கிய உத்தரவு நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது.ஞானசார தேரர் இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சிறைத்தண்டனையை அமுல்படுத்துவதற்காக ஞானசார தேரரை கைது செய்ய முன்னதாக திறந்த பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டிருந்தது.நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த நீதிபதிகள் குழாம், ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.அதற்கமைய, முன்னதாக விதிக்கப்பட்ட 6 வருட கடூழிய சிறைத் தண்டனையில் எஞ்சி இருக்க கூடிய 5 வருடங்களையும் மீள தண்டனைக் காலமாக உறுதிப்படுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement