• Nov 22 2024

கெஹலியவுக்கு பிணை வழங்கப்படுமா..? புதிய தீர்மானம்!

Chithra / Jul 2nd 2024, 3:07 pm
image

  

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா? இல்லை? அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவு ஒகஸ்ட் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்

குறித்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கெஹலியவுக்கு பிணை வழங்கப்படுமா. புதிய தீர்மானம்   முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்த மனு விசாரணைக்கு அனுமதிக்கப்படுமா இல்லை அவரை பிணையில் விடுவிப்பதற்கான கோரிக்கை தொடர்பான தீர்மானம் மற்றும் உத்தரவு ஒகஸ்ட் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தரமற்ற தடுப்பூசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பிலான விசாரணை முடியும் வரை தம்மை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்குறித்த மனுவை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஷஷி மகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement