• Dec 09 2024

பட்டப்படிப்புக்கு வேலையில்லையெனின் பல்கலைக்கழகங்களை இழுத்துமூடு...! மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பட்டதாரிகள்...!

Sharmi / Jul 2nd 2024, 3:01 pm
image

படிக்காவிட்டால் வீதிகளில் திரிவீர்கள் என்று எங்களுக்கு வீட்டில் சொல்லி சொல்லி படிக்க வைத்தார்கள்.நாங்கள் படித்து பட்டம் பெற்றதன் பின்னர் வேலைக்காக வீதி வீதியாக திரியவேண்டிக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(02)  காலை மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அரச  நியமனத்தினை வழங்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

நீண்டகாலமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும், அவர்களுக்கான அரச நியமனங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பாராமுகமாகவும் இருப்பதாகவும் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டதுடன், பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கலந்துகொண்டதுடன் ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரியும் கலந்து கொண்டார்.

இதன்போது பட்டப்படிப்புக்கு வேலையில்லையெனின் பல்கலைக்கழகங்களை இழுத்து மூடு,நாங்கள் பட்டதாரிகளா நட்டதாரிகளா,வேண்டும் வேண்டும் வேலை வேண்டும், பட்டம் கிடைத்தும் பலனில்லை அரசு தொழில் தரமறுப்பதினால் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.

தமது போராட்டமானது இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கான நியமனங்கள் கிடைக்கும் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.


பட்டப்படிப்புக்கு வேலையில்லையெனின் பல்கலைக்கழகங்களை இழுத்துமூடு. மட்டக்களப்பில் வீதியில் இறங்கிய பட்டதாரிகள். படிக்காவிட்டால் வீதிகளில் திரிவீர்கள் என்று எங்களுக்கு வீட்டில் சொல்லி சொல்லி படிக்க வைத்தார்கள்.நாங்கள் படித்து பட்டம் பெற்றதன் பின்னர் வேலைக்காக வீதி வீதியாக திரியவேண்டிக்கு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க உறுப்பினர்கள் தெரிவித்தனர்.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(02)  காலை மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபிக்கு அருகில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பட்டத்தினை பூர்த்தி செய்த பட்டதாரிகளுக்கு அரச  நியமனத்தினை வழங்க கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .நீண்டகாலமாக இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாகவும், அவர்களுக்கான அரச நியமனங்கள் தொடர்பில் அரசியல்வாதிகளும் அரசாங்கமும் பாராமுகமாகவும் இருப்பதாகவும் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இந்த போராட்டத்தில் இரு நூறுக்கும் மேற்பட்ட வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டதுடன், பட்டதாரிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் கலந்துகொண்டதுடன் ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரியும் கலந்து கொண்டார்.இதன்போது பட்டப்படிப்புக்கு வேலையில்லையெனின் பல்கலைக்கழகங்களை இழுத்து மூடு,நாங்கள் பட்டதாரிகளா நட்டதாரிகளா,வேண்டும் வேண்டும் வேலை வேண்டும், பட்டம் கிடைத்தும் பலனில்லை அரசு தொழில் தரமறுப்பதினால் போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளையும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்தியிருந்தனர்.தமது போராட்டமானது இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கான நியமனங்கள் கிடைக்கும் வரையில் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement