நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முதலில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா இடம்பெறும் என்ற குழப்பம் அரசியல் கட்சிகள் உட்பட பொது மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்படும். சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளியாகும் தகவல்கள் அடிப்படையற்றவை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.அதன்படி, நாடு நல்லதொரு நிலையை அடைந்ததன் பின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.முதலில் நாடாளுமன்றத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா இடம்பெறும் என்ற குழப்பம் அரசியல் கட்சிகள் உட்பட பொது மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.அரசியலமைப்பின் பிரகாரம் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டும். ஆனால், நாடாளுமன்றத்தை கலைப்பதன் ஊடாக பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.