• Sep 20 2024

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ரணிலின் போலி நாடகத்தை - தமிழ் கட்சிகள் இனியும் நம்பப்போகுதா?- நிஷாந்தன் கேள்வி! samugammedia

Tamil nila / May 17th 2023, 9:49 pm
image

Advertisement

தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் போலி நாடகத்தை தமிழ் கட்சிகள் இனியும் நம்ப போகிறதா என தமிழ் தேசியப் பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் கேள்வி எழுப்பினார்.

இன்று புதன்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இரு சந்திப்புகள் இடம் பெற்ற நிலையில் இரண்டாம் உருப்படியான முடிவுகள் ஏதும் இன்றி முடிவடைந்தது.

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார் என்பது தமிழ் கட்சிகளுக்கும் மக்களுக்கும் நன்கு தெரியும்.

ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வருவதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் எனக்கூறி தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சிப் பீடத்தை பாதுகாத்தார்.

அக்கால பகுதியில் பாராளுமன்றத்தை சுமார் 30க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள்.

ஆனால் தற்போது ராணியில் விக்கிரமசிங்க  ஜனாதிபதியாக வந்தமை தேசிய பட்டியல் ஆசன ஊடாக பிரதமராகி பின்னர் ஜனாதிபதியானார்.

இவ்வாறான ஒரு நிலையில் பாராளுமன்றப் பலம் இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார் என்பது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் நன்கு தெரியும்.

ஆனால் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கண்துடைப்பு நடத்துகிறார்.

அது மட்டுமல்லாது தற்போது வடக்கில் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிகப்படும் நிலையில் வெள்ளை வான்களில் ஆட்கடத்தல் மற்றும் தொல்பொருள் இடங்கள் உரையாடல் போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.

இத்தகைய செயல்பாடு  தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவதற்கும்  வடக்கில் இராணுவத்தை நிலை கொள்ள வைக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்க கூடியதாக உள்ளது.

ஆகவே தமிழ் கட்சிகள் இனியாவது ரனில் விக்கிரமசிங்காவின் நாடகத்தை நம்பி ஏமாறாமல் சர்வதேசத்தின் ஊடாக தீர்வை பெறுவதற்கு ஒர் அணியில் முயற்சிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் ரணிலின் போலி நாடகத்தை - தமிழ் கட்சிகள் இனியும் நம்பப்போகுதா- நிஷாந்தன் கேள்வி samugammedia தமிழ் மக்களுக்கான தீர்வு விடயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் போலி நாடகத்தை தமிழ் கட்சிகள் இனியும் நம்ப போகிறதா என தமிழ் தேசியப் பண்பாட்டு பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நிசாந்தன் கேள்வி எழுப்பினார்.இன்று புதன்கிழமை யாழ். ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் தமிழ் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இரு சந்திப்புகள் இடம் பெற்ற நிலையில் இரண்டாம் உருப்படியான முடிவுகள் ஏதும் இன்றி முடிவடைந்தது.தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் இருந்து தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறார் என்பது தமிழ் கட்சிகளுக்கும் மக்களுக்கும் நன்கு தெரியும்.ஏனெனில் நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வருவதற்கு இதுவே நல்ல சந்தர்ப்பம் எனக்கூறி தமிழ் கட்சிகளின் ஆதரவை பெற்று ஆட்சிப் பீடத்தை பாதுகாத்தார்.அக்கால பகுதியில் பாராளுமன்றத்தை சுமார் 30க்கும் மேற்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப் படுத்தினார்கள்.ஆனால் தற்போது ராணியில் விக்கிரமசிங்க  ஜனாதிபதியாக வந்தமை தேசிய பட்டியல் ஆசன ஊடாக பிரதமராகி பின்னர் ஜனாதிபதியானார்.இவ்வாறான ஒரு நிலையில் பாராளுமன்றப் பலம் இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை தரமாட்டார் என்பது அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் நன்கு தெரியும்.ஆனால் அரசியல் தீர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தமிழ் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை அழைத்து கண்துடைப்பு நடத்துகிறார்.அது மட்டுமல்லாது தற்போது வடக்கில் முள்ளிவாய்க்கால் வாரம் அனுஷ்டிகப்படும் நிலையில் வெள்ளை வான்களில் ஆட்கடத்தல் மற்றும் தொல்பொருள் இடங்கள் உரையாடல் போன்ற விடயங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது.இத்தகைய செயல்பாடு  தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவதற்கும்  வடக்கில் இராணுவத்தை நிலை கொள்ள வைக்கும் ஒரு செயற்பாடாகவே பார்க்க கூடியதாக உள்ளது.ஆகவே தமிழ் கட்சிகள் இனியாவது ரனில் விக்கிரமசிங்காவின் நாடகத்தை நம்பி ஏமாறாமல் சர்வதேசத்தின் ஊடாக தீர்வை பெறுவதற்கு ஒர் அணியில் முயற்சிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement