• Sep 27 2024

வடக்கு கடல்வளத்துறை புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா? - சூசை ஆனந்தன் கேள்வி..!

Tamil nila / Sep 26th 2024, 7:48 pm
image

Advertisement

வடக்கு கடல் வளத்துறை புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா? கலாநிதி சூசை ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் 

மேலும் அவர் தெரிவிக்கையில்,, 


கடல் வளத்துறை அமைச்சு புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. நாட்டின்  ஏற்றுமதி வருமானத்தை கணிசமாகப் பெற்றுத் தரக்கூடிய ஓர் துறையாக இருந்தும் கடந்த காலங்களில் அதனை  நாடு தவற விட்டிருக்கிறது. நெத்தலியையும் ரின் மீனையும் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதே வரலாறாக உள்ளது.



இத் துறைக்குள் ஊடுருவியிருந்த ஊழல்கள் , அரசியல் தலையீடுகள், வினைத்திறனற்ற செயற்பாடுகள்  குறிப்பாக  வடக்கில்  எல்லை தாண்டிய இந்திய மீனவர் நெருக்கடிகள் சட்ட விரோத மீன்பிடிச் செயற்பாடுகள் வடக்கு  மீனவர் மீள் குடியேற்றங்களின் ஆக்கிரமிப்புக்கள் , நீரில் வளர்ப்பிலுள்ள குளறுபடி  செயற்பாடுகள்  போன்றன இதற்குப் பின்புலமாக இருந்துள்ளன. 

ஆகவே குறித்த விடயங்களில் புதிய அதிபர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேற்குறித்த நெருக்கடிகளே ஜனாதிபதியின் முன்னுள்ள  முக்கிய சவால்களாகவும்  உள்ளன. இவற்றை அதிபர் கடற்றொழில் அமைச்சர் வெற்றி கொள்வதன் மூலமே கடல் வளப் பொருளாதாரத்தை அவரால்  கட்டி எழுப்ப முடியும்.  

வடக்கின் கடல்வள நிலை உள்நாட்டு   அரசியல் நெருக்கடிகள் (1983) தொடங்கிய கையோடு வடக்கிலே கடல் வளத்துறையிலும்  நெருக்கடிகள் ஆரம்பித்துவிட்டன.. இனப்பிரச்சினை அரசியல் தீர்வு எவையுமின்றி தொடர்வது போல கடல்வளத்துறை சார்ந்த நெருக்கடிகளும் எந்த தீர்வுமின்றி தொடர்கின்றன.

இறுதியாக ஜனாதிபதியாக இருந்த ரணில் வரை எந்த ஜனாதிபதியினாலும் மீனவர்கள் எதிர் நோக்கி வந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. அரசியல் அறவொழுக்கமற்று, லஞ்சமும், ஊழலும், அரசியல் தலையீடுகளும் ஒரு புறமிருக்க  முகாமைத்துவ குறைபாடுகளும் வினைத்திறனற்ற அமைச்சர்களும், தமிழ் கட்சிகளின் சுயநலப் போக்குகளும்  இத்துறையினைச் சீரழித்ததுடன் இத்துறையில் தங்கியிருந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழித்திருந்தது.

2009 இல் போர் முடிவுக்கு வந்த போதிலும்  கடற்றொழில் துறை பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இந்திய மீனவர் அத்துமீறல் இந்திய மீனவர்களின்  எல்லை தாண்டிய ஊடுருவல்கள் பல தசாப்தங்களளைக் கடந்தும் அதற்கு இது வரையில் கடந்த  அரசினால் காத்திரமான தீர்வினைக் காண முடியவில்லை தமிழக அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் வடபகுதி கடல்வளம் சூறையாடப்பட்டதுடன் அத்துறையில் தங்கி வாழ்ந்த சுமார் இரண்டு இலட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமும்  மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் நாடு பெறவேண்டிய கடல் உணவு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து அந்நியச் செலாவணி சம்பாத்தியமும் பாதிப்படைந்துள்ளது. 

இதனை மேலும் தொடர விட அனுமதிக்ககூடாது. புதிய அரசு இதனைத் தீர்த்து வைப்பதற்கான பொறிமுறை ஒன்றினைக் கண்டறிவது அவசியம்.

சட்டபூர்வமற்ற மீன்பிடிச் செயற்பாடுகள், முறையற்ற சில மீன்பிடி முறைகளுக்குத்  தடைகள் உள்ளன. ஆனால் அவை எழுத்து வடிவில் மட்டுமே உள்ளன. 

குறிப்பாக சர்ச்சைக்குரிய இழுவைமடித் தடைச் சட்டத்தினை தாமதமின்றி நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.இதன் மூலம் இந்திய இழுவைமடிகளின் சேயற்பகட்டினை கட்டுக்குள்  கொண்டுவரமுடியும்.

அத்தோடு சூழலுக்குப் பேரழிவை உண்டாக்க கூடிய வெடிவைத்து மீன்பிடித்தல் மற்றும் ஏற்கனவே தடையிலுள்ள சுருக்குமடி,தங்கூசி வலைகள்,ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல்  போன்ற  மீன்பிடிச் செயற்பாடுகளை இறுக்கமாக கண்காணிப்பதும் அவசியம். நாரா மற்றும் நக்டா, மீபா கடல் வளத்துறை சார் நிறுவனங்களின் மந்தமான செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாகவும்  ஆக்குதல் அவசியம். 

மீனவ மீள் குடியேற்றம் போரின்போது வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் இந்தியாவிலும் அவல வாழ்வு வாழ்ந்து வரும் மீனவர்கள் தமது இருப்பிடம் திரும்பி தமது தொழில் நடவடிக்கைகளை மீளத் தொடர வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அத்துடன் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஆக்கிரமிப்புக்குளாகியிருக்கும் கரையோரப் பகுதிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும்.

முட்கம்பி வேலிகள்,தடுப்பு அரண்களை,பதுங்கு குழிகள் ,இராணுவ காவலரண்கள், விகாரைகள்,மனிதப்புதைகுழிகள் போன்றவை தொல்லியல் எச்சங்கள் போல காட்ளியளிக்கின்றன.

துறைசார் வளர்ச்சிக்கு இவைகள் ஆரோக்கியமானவைகள் அல்ல.

நாட்டிற்கு பெருமளவுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதில் வடபகுதி கடல்வளத்துறை கணிசமான இடத்தை வகிக்கின்ற போதிலும் மேலே சுட்டிக்காட்டிய நெருக்கடிகள் காரணமாக அத்தகைய வாய்ப்பினை பெறமுடியாத சூழலே நிலவுகின்றன. 

ஆகவே நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீள புதிய அதிபர்  இத்துறை சார்ந்து அதீத கவனத்தை திருப்புவது அவசியம். பார்ப்போம் பொறுத்திருந்து- என்றுள்ளது.


வடக்கு கடல்வளத்துறை புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா - சூசை ஆனந்தன் கேள்வி. வடக்கு கடல் வளத்துறை புதிய ஆட்சியில் புத்துயிர் பெறுமா கலாநிதி சூசை ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.குறித்த விடயம் தொடர்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார் மேலும் அவர் தெரிவிக்கையில்,, கடல் வளத்துறை அமைச்சு புதிய ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. நாட்டின்  ஏற்றுமதி வருமானத்தை கணிசமாகப் பெற்றுத் தரக்கூடிய ஓர் துறையாக இருந்தும் கடந்த காலங்களில் அதனை  நாடு தவற விட்டிருக்கிறது. நெத்தலியையும் ரின் மீனையும் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டதே வரலாறாக உள்ளது.இத் துறைக்குள் ஊடுருவியிருந்த ஊழல்கள் , அரசியல் தலையீடுகள், வினைத்திறனற்ற செயற்பாடுகள்  குறிப்பாக  வடக்கில்  எல்லை தாண்டிய இந்திய மீனவர் நெருக்கடிகள் சட்ட விரோத மீன்பிடிச் செயற்பாடுகள் வடக்கு  மீனவர் மீள் குடியேற்றங்களின் ஆக்கிரமிப்புக்கள் , நீரில் வளர்ப்பிலுள்ள குளறுபடி  செயற்பாடுகள்  போன்றன இதற்குப் பின்புலமாக இருந்துள்ளன. ஆகவே குறித்த விடயங்களில் புதிய அதிபர் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. மேற்குறித்த நெருக்கடிகளே ஜனாதிபதியின் முன்னுள்ள  முக்கிய சவால்களாகவும்  உள்ளன. இவற்றை அதிபர் கடற்றொழில் அமைச்சர் வெற்றி கொள்வதன் மூலமே கடல் வளப் பொருளாதாரத்தை அவரால்  கட்டி எழுப்ப முடியும்.  வடக்கின் கடல்வள நிலை உள்நாட்டு   அரசியல் நெருக்கடிகள் (1983) தொடங்கிய கையோடு வடக்கிலே கடல் வளத்துறையிலும்  நெருக்கடிகள் ஆரம்பித்துவிட்டன. இனப்பிரச்சினை அரசியல் தீர்வு எவையுமின்றி தொடர்வது போல கடல்வளத்துறை சார்ந்த நெருக்கடிகளும் எந்த தீர்வுமின்றி தொடர்கின்றன.இறுதியாக ஜனாதிபதியாக இருந்த ரணில் வரை எந்த ஜனாதிபதியினாலும் மீனவர்கள் எதிர் நோக்கி வந்த பிரச்சினைகளைத் தீர்க்க முடியவில்லை. அரசியல் அறவொழுக்கமற்று, லஞ்சமும், ஊழலும், அரசியல் தலையீடுகளும் ஒரு புறமிருக்க  முகாமைத்துவ குறைபாடுகளும் வினைத்திறனற்ற அமைச்சர்களும், தமிழ் கட்சிகளின் சுயநலப் போக்குகளும்  இத்துறையினைச் சீரழித்ததுடன் இத்துறையில் தங்கியிருந்த மக்களின் வாழ்வாதாரத்தையும் சீரழித்திருந்தது.2009 இல் போர் முடிவுக்கு வந்த போதிலும்  கடற்றொழில் துறை பழைய நிலைக்குத் திரும்பவில்லை. இந்திய மீனவர் அத்துமீறல் இந்திய மீனவர்களின்  எல்லை தாண்டிய ஊடுருவல்கள் பல தசாப்தங்களளைக் கடந்தும் அதற்கு இது வரையில் கடந்த  அரசினால் காத்திரமான தீர்வினைக் காண முடியவில்லை தமிழக அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகளால் வடபகுதி கடல்வளம் சூறையாடப்பட்டதுடன் அத்துறையில் தங்கி வாழ்ந்த சுமார் இரண்டு இலட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமும்  மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது.அத்துடன் நாடு பெறவேண்டிய கடல் உணவு ஏற்றுமதி வீழ்ச்சியடைந்து அந்நியச் செலாவணி சம்பாத்தியமும் பாதிப்படைந்துள்ளது. இதனை மேலும் தொடர விட அனுமதிக்ககூடாது. புதிய அரசு இதனைத் தீர்த்து வைப்பதற்கான பொறிமுறை ஒன்றினைக் கண்டறிவது அவசியம்.சட்டபூர்வமற்ற மீன்பிடிச் செயற்பாடுகள், முறையற்ற சில மீன்பிடி முறைகளுக்குத்  தடைகள் உள்ளன. ஆனால் அவை எழுத்து வடிவில் மட்டுமே உள்ளன. குறிப்பாக சர்ச்சைக்குரிய இழுவைமடித் தடைச் சட்டத்தினை தாமதமின்றி நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.இதன் மூலம் இந்திய இழுவைமடிகளின் சேயற்பகட்டினை கட்டுக்குள்  கொண்டுவரமுடியும்.அத்தோடு சூழலுக்குப் பேரழிவை உண்டாக்க கூடிய வெடிவைத்து மீன்பிடித்தல் மற்றும் ஏற்கனவே தடையிலுள்ள சுருக்குமடி,தங்கூசி வலைகள்,ஒளிபாய்ச்சி மீன்பிடித்தல்  போன்ற  மீன்பிடிச் செயற்பாடுகளை இறுக்கமாக கண்காணிப்பதும் அவசியம். நாரா மற்றும் நக்டா, மீபா கடல் வளத்துறை சார் நிறுவனங்களின் மந்தமான செயற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாகவும்  ஆக்குதல் அவசியம். மீனவ மீள் குடியேற்றம் போரின்போது வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து அகதி முகாம்களிலும் இந்தியாவிலும் அவல வாழ்வு வாழ்ந்து வரும் மீனவர்கள் தமது இருப்பிடம் திரும்பி தமது தொழில் நடவடிக்கைகளை மீளத் தொடர வழிவகைகள் செய்யப்பட வேண்டும். அத்துடன் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஆக்கிரமிப்புக்குளாகியிருக்கும் கரையோரப் பகுதிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும்.முட்கம்பி வேலிகள்,தடுப்பு அரண்களை,பதுங்கு குழிகள் ,இராணுவ காவலரண்கள், விகாரைகள்,மனிதப்புதைகுழிகள் போன்றவை தொல்லியல் எச்சங்கள் போல காட்ளியளிக்கின்றன.துறைசார் வளர்ச்சிக்கு இவைகள் ஆரோக்கியமானவைகள் அல்ல.நாட்டிற்கு பெருமளவுக்கு வருமானத்தை ஈட்டித்தருவதில் வடபகுதி கடல்வளத்துறை கணிசமான இடத்தை வகிக்கின்ற போதிலும் மேலே சுட்டிக்காட்டிய நெருக்கடிகள் காரணமாக அத்தகைய வாய்ப்பினை பெறமுடியாத சூழலே நிலவுகின்றன. ஆகவே நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீள புதிய அதிபர்  இத்துறை சார்ந்து அதீத கவனத்தை திருப்புவது அவசியம். பார்ப்போம் பொறுத்திருந்து- என்றுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement