• Sep 08 2024

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படுமா? – நாளை தீர்மானம்

Chithra / Jul 25th 2024, 8:48 am
image

Advertisement

 

பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை அறிக்கை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் பாணின் விலை குறைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வர முடியாது என அவர் தெரிவித்தார்.

பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாணிற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

இதன்படி, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் பேக்கரி உற்பத்தியாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும், விலை குறைக்கப்படுமா இல்லையா என நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படுமா – நாளை தீர்மானம்  பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை அறிக்கை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக அதன் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.ஆனால் பாணின் விலை குறைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வர முடியாது என அவர் தெரிவித்தார்.பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாணிற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.இதன்படி, பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பது தொடர்பில் பேக்கரி உற்பத்தியாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.எனினும், விலை குறைக்கப்படுமா இல்லையா என நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement