• Apr 20 2025

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை இலங்கை அரசாங்கம் வெளியிடுமா? இம்ரான் எம்.பி கேள்வி

Sharmi / Apr 18th 2025, 3:05 pm
image

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை இலங்கை அரசாங்கம் வெளியிடுமா? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வியெழுப்பியுள்ளார்.

மூதூர் கலாசார மண்டபத்தில் நேற்றையதினம்(17) மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் குண்டு தாக்குதலின், சூத்திரதாரிகளை வெளியிடுவோம் எனவும் ஜனாதிபதி கூறுகின்றார்.

இதற்காக இன்னும் இரண்டொரு தினங்களே உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம் இவர்களால் அவற்றை செய்ய முடியுமா என்று.

தேர்தல் காலங்களில் மாத்திரம், இவர்கள் திருடர்களைப் பிடிக்க வேண்டும். சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.

அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் மேடைகளில் பேசித் திரிகின்ற இவர்களால், இன்னும் உருப்படியான வேலைகள் எதனையும் செய்ய முடியாமல் இருக்கின்றனர்.

பண மோசடிகளை செய்கின்றவர்கள் மாத்திரம் திருடர்கள் அல்ல. இன்று தேசிய மக்கள் சக்தியின் கல்வியில் பட்டங்களை திருடியிருக்கின்றார்கள். அதுவும் ஊழல் தான்.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 156 பேரும் இன்னும் அவர்களுடைய கல்வி தகமையை உறுதிப்படுத்தவில்லை.

ஆனால் எமது தலைவர் சஜித் பிரேமதாச மொண்டசிரியிலிருந்து உயர்கல்வி வரையும் அவருடைய தகைமையை பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தி இருக்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.












உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை இலங்கை அரசாங்கம் வெளியிடுமா இம்ரான் எம்.பி கேள்வி உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை இலங்கை அரசாங்கம் வெளியிடுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கேள்வியெழுப்பியுள்ளார்.மூதூர் கலாசார மண்டபத்தில் நேற்றையதினம்(17) மாலை நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்கு முன்னர் ஈஸ்டர் குண்டு தாக்குதலின், சூத்திரதாரிகளை வெளியிடுவோம் எனவும் ஜனாதிபதி கூறுகின்றார்.இதற்காக இன்னும் இரண்டொரு தினங்களே உள்ளன. பொறுத்திருந்து பார்ப்போம் இவர்களால் அவற்றை செய்ய முடியுமா என்று.தேர்தல் காலங்களில் மாத்திரம், இவர்கள் திருடர்களைப் பிடிக்க வேண்டும். சூத்திரதாரிகளை கண்டுபிடிக்க வேண்டும்.அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் மேடைகளில் பேசித் திரிகின்ற இவர்களால், இன்னும் உருப்படியான வேலைகள் எதனையும் செய்ய முடியாமல் இருக்கின்றனர்.பண மோசடிகளை செய்கின்றவர்கள் மாத்திரம் திருடர்கள் அல்ல. இன்று தேசிய மக்கள் சக்தியின் கல்வியில் பட்டங்களை திருடியிருக்கின்றார்கள். அதுவும் ஊழல் தான்.தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 156 பேரும் இன்னும் அவர்களுடைய கல்வி தகமையை உறுதிப்படுத்தவில்லை.ஆனால் எமது தலைவர் சஜித் பிரேமதாச மொண்டசிரியிலிருந்து உயர்கல்வி வரையும் அவருடைய தகைமையை பாராளுமன்றத்தில் உறுதிப்படுத்தி இருக்கின்றார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement