• Sep 20 2024

புலிகளை போன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழியுமா?

Chithra / Jan 7th 2023, 11:59 am
image

Advertisement

இறுக்கமான கட்டமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் காணப்பட்டதன் காரணமாகவே அவர்கள் அழிந்து போனதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை போன்று தமது அமைப்பு இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவருடைய கடைசி காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல அரசியல் ஆய்வாளர்கள் பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்கின்ற முக்கிய நபர்கள் ஆகியோர் பலர் அவருக்கு உயிர் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார்கள். பலர் அவரை இந்த நாட்டை விட்டு தற்காலிகமாக வெளியே வரச்சொல்லி கேட்டார்கள், நான் இந்த வருடத்தினை தாண்ட மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவருடைய பாதையிலிருந்து அவர் மாறவில்லை.


தமிழ்தேசிய மக்கள் முன்னணி உருவாகிய போது அந்தப் பண்புகளை உடைய ஒரு அமைப்பாக செய்யப்படவேண்டும் என்ற ஆழமான ஒரு புரிதலோடு தான் உருவாகியது.

இன்றைக்கு எங்களுடைய அமைப்பை பற்றி பேசுகின்ற பொழுது எங்களிடம் விமர்சிக்கின்ற கோணத்தில் முன்வைக்கின்ற கருத்துக்கள் இறுக்கமான விட்டுக்கொடுப்பு இல்லாத மக்களின் ஆதரவை பெற முடியாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இறுக்கமாக இருந்து, அதனால் தான் அழிந்து போனது. நீங்களும் அப்படித்தான் இறுதியில் அழிந்து போவீர்கள் என்பது தான் வழமையாக சொல்லும் கருத்து.

எங்களுடைய அமைப்பினை பொறுத்தவரையிலே மாமனிதர் குமார் பொன்னம்பலம் இந்த அமைப்புக்கு தலைமை தாங்கி இருந்தால் அப்படிப்பட்ட கருத்துக்களுக்கு சொல்லி இருக்கக்கூடிய பதில் நாங்கள் தோற்பதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதாகும் சிதம்பரநாதன் கூறிய வார்த்தை, அவரது பார்வை தமிழினம் சம்பந்தமாக சாதாரண மக்கள் சம்பந்தமாக மக்கள் போராட்டம் சம்மந்தமாக இன்றைக்கு நடைபெறுகின்ற அரசியல் என்ற பெயரில் நடைபெறுகின்ற மோசடிகள், இன விப்புக்கள், துரோகங்கள் இதுபற்றி அவர் வைத்திருக்கின்ற பார்வையோடு எங்களுக்கு எந்தவிதமான கூச்சமில்லாமல் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓரிடத்தில் இருக்கின்றோம். - என்றார்.

புலிகளை போன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழியுமா இறுக்கமான கட்டமைப்பாக தமிழீழ விடுதலைப்புலிகள் காணப்பட்டதன் காரணமாகவே அவர்கள் அழிந்து போனதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்ததாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 23வது நினைவேந்தல் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் விடுதலைப்புலிகளின் கட்டமைப்பை போன்று தமது அமைப்பு இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுவதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டிருந்தார்.அவர் மேலும் தெரிவித்ததாவது,அவருடைய கடைசி காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல அரசியல் ஆய்வாளர்கள் பாதுகாப்பு நிலைமைகளை ஆய்வு செய்கின்ற முக்கிய நபர்கள் ஆகியோர் பலர் அவருக்கு உயிர் ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார்கள். பலர் அவரை இந்த நாட்டை விட்டு தற்காலிகமாக வெளியே வரச்சொல்லி கேட்டார்கள், நான் இந்த வருடத்தினை தாண்ட மாட்டேன் என்று கூறியிருந்தார். ஆனால் அவருடைய பாதையிலிருந்து அவர் மாறவில்லை.தமிழ்தேசிய மக்கள் முன்னணி உருவாகிய போது அந்தப் பண்புகளை உடைய ஒரு அமைப்பாக செய்யப்படவேண்டும் என்ற ஆழமான ஒரு புரிதலோடு தான் உருவாகியது.இன்றைக்கு எங்களுடைய அமைப்பை பற்றி பேசுகின்ற பொழுது எங்களிடம் விமர்சிக்கின்ற கோணத்தில் முன்வைக்கின்ற கருத்துக்கள் இறுக்கமான விட்டுக்கொடுப்பு இல்லாத மக்களின் ஆதரவை பெற முடியாது.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமும் இறுக்கமாக இருந்து, அதனால் தான் அழிந்து போனது. நீங்களும் அப்படித்தான் இறுதியில் அழிந்து போவீர்கள் என்பது தான் வழமையாக சொல்லும் கருத்து.எங்களுடைய அமைப்பினை பொறுத்தவரையிலே மாமனிதர் குமார் பொன்னம்பலம் இந்த அமைப்புக்கு தலைமை தாங்கி இருந்தால் அப்படிப்பட்ட கருத்துக்களுக்கு சொல்லி இருக்கக்கூடிய பதில் நாங்கள் தோற்பதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதாகும் சிதம்பரநாதன் கூறிய வார்த்தை, அவரது பார்வை தமிழினம் சம்பந்தமாக சாதாரண மக்கள் சம்பந்தமாக மக்கள் போராட்டம் சம்மந்தமாக இன்றைக்கு நடைபெறுகின்ற அரசியல் என்ற பெயரில் நடைபெறுகின்ற மோசடிகள், இன விப்புக்கள், துரோகங்கள் இதுபற்றி அவர் வைத்திருக்கின்ற பார்வையோடு எங்களுக்கு எந்தவிதமான கூச்சமில்லாமல் அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளக்கூடிய ஓரிடத்தில் இருக்கின்றோம். - என்றார்.

Advertisement

Advertisement

Advertisement