• Jun 26 2024

அனைவரது ஒருமித்த ஆதரவின் மூலமே பொதுவேட்பாளர் விடயம் வெற்றி வாய்ப்பாக அமையும்...! கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு...!

Sharmi / Jun 17th 2024, 10:48 am
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன்,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,

இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை.

ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும்.யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது.

அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும்.

அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

அனைவரது ஒருமித்த ஆதரவின் மூலமே பொதுவேட்பாளர் விடயம் வெற்றி வாய்ப்பாக அமையும். கிழக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு. ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைவரும் ஒன்றிணைந்து ஆதரிப்பதன் மூலமே வெற்றிக்கான வாய்ப்பாக அமையும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தாளங்குடாவில் புனரமைக்கப்பட்ட வீதி திறந்து வைக்கப்பட்டது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டலின் கீழ் பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள்,மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் நிதியுதவியுடன் தாளங்குடா கடற்கரை வீதி சுமார் 92இலட்சம் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மு.கோபாலரட்ணம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டதுடன் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் பூ.பிரசாந்தன்,மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்சணாகௌரி தினேஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது கருத்து தெரிவித்த கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான்,இந்த நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இன்று எந்த கட்சியுமே பலமான நிலையில் இல்லை.ஒரு பொதுவேட்பாளரை தெரிவுசெய்து அனைத்து கட்சிகளும் ஆதரிக்கும்போது சக்திவாய்ந்த தலைவர் ஒருவரை இந்த நாட்டில் தேர்வுசெய்யமுடியும்.யார் ஜனாதிபதியாக வரவேண்டும் என்பதற்கு 51வீதமான வாக்குகள் தேவையாகவுள்ளது.அவ்வாறான வாக்குகளைப்பெறும் நிலையானது இன்றைய நிலையில் எந்த கட்சியனாலும் கடுமையான போட்டியாகவே இருக்கும்.அதனால் ஒரு பொது வேட்பாளரை நிறுத்தி அனைவரும் இன்றிணையும்போது வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாகவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement