• Jun 26 2024

பாதசாரி கடவையில் கோர விபத்து; சீன பிரஜைகள் பயணித்த கார் மோதி தந்தை பலி - மகன் வைத்தியசாலையில்!

Chithra / Jun 17th 2024, 10:36 am
image

Advertisement



களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய தந்தையொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பேருவளையிலிருந்து களுத்துறை நோக்கி சீன பிரஜைகளுடன் பயணித்த கார் ஒன்று,

வீதியில் பாதசாரி கடவையை கடந்த தந்தை மற்றும் மகன் மீது மோதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து சீன பிரஜைகள் பயணித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதசாரி கடவையில் கோர விபத்து; சீன பிரஜைகள் பயணித்த கார் மோதி தந்தை பலி - மகன் வைத்தியசாலையில் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.களுத்துறை நாகொடை பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய தந்தையொருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.பேருவளையிலிருந்து களுத்துறை நோக்கி சீன பிரஜைகளுடன் பயணித்த கார் ஒன்று,வீதியில் பாதசாரி கடவையை கடந்த தந்தை மற்றும் மகன் மீது மோதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதனையடுத்து சீன பிரஜைகள் பயணித்த காரின் சாரதி கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement