• Sep 20 2024

கனடாவில் மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவரும் சிறுமியும் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Tamil nila / Aug 21st 2024, 7:18 pm
image

Advertisement

மாடியிலிருந்து விழுந்து இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவம் கனடாவின் வடக்கு வான்கூவார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமி ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயர் அடுக்கு மாடி ஒன்றிலிருந்து இந்த இருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

தீயணைப்பு படையினர் மற்றும் உயிர் காப்பு உதவியாளர்கள் காயமடைந்த நிலையிலிருந்த இருவரின் உயிரையும் மீட்க முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தடவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இந்த சம்பவத்தினால் பொது மக்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் மாடியில் இருந்து விழுந்து பெண் ஒருவரும் சிறுமியும் மர்மமான முறையில் உயிரிழப்பு மாடியிலிருந்து விழுந்து இருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் கனடாவின் வடக்கு வான்கூவார் பகுதியில் இடம்பெற்றுள்ளது.பெண் ஒருவரும் பாடசாலை செல்லும் வயதுடைய சிறுமி ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.உயர் அடுக்கு மாடி ஒன்றிலிருந்து இந்த இருவரும் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.தீயணைப்பு படையினர் மற்றும் உயிர் காப்பு உதவியாளர்கள் காயமடைந்த நிலையிலிருந்த இருவரின் உயிரையும் மீட்க முயற்சித்த போதும் அந்த முயற்சி வெற்றி அளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் தடவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.குறித்த இந்த சம்பவத்தினால் பொது மக்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்து கிடையாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement