• Feb 17 2025

ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய பெண்..! வவுனியாவில் சம்பவம்

Chithra / Jan 30th 2024, 8:18 am
image


வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில்  ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டர் சைக்கிளில் வந்த நிலையில் வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.

இதன்போது 920 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன்,

பெண்ணை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர். 

கைது செய்யப்பட்ட பெண் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். 

மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரிடம் சிக்கிய பெண். வவுனியாவில் சம்பவம் வவுனியா - வைரவபுளியங்குளம் பகுதியில்  ஐஸ் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் வேப்பங்குளம் பகுதியில் இருந்து வவுனியா நகரப் பகுதி நோக்கி ஐஸ் போதைப் பொருளுடன் மோட்டர் சைக்கிளில் வந்த நிலையில் வைரவபுளியங்குளம், புகையிரத நிலைய வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் வழிமறித்து சோதனை செய்துள்ளனர்.இதன்போது 920 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன்,பெண்ணை கைது செய்து வவுனியா பொலிசாரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட பெண் வேப்பங்குளம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவராவார். மேலதிக விசாரணைகளின் பின் குறித்த பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement