• Oct 31 2024

தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த யுவதி ரயிலில் மோதி மரணம்!

Chithra / Oct 30th 2024, 7:47 am
image

Advertisement


அளுத்கமவிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த  அதிவேக ரயிலில் மோதி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. 

கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை வேலாபுர வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள ரயில் பாதையில் குறித்த யுவதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கு ஏற்படும் முன்னதாக குறித்த பெண் தண்டவாளத்திற்கு அருகில் நின்று தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த யுவதி ரயிலில் மோதி மரணம் அளுத்கமவிலிருந்து பொல்கஹவெல நோக்கிப் பயணித்த  அதிவேக ரயிலில் மோதி யுவதி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது. கல்லனமுல்ல, பயாகல பிரதேசத்தில் வசிக்கும் 23 வயதுடைய யுவதியே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.களுத்துறை வேலாபுர வித்தியாலயத்திற்கு பின்புறம் உள்ள ரயில் பாதையில் குறித்த யுவதி ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.விபத்துக்கு ஏற்படும் முன்னதாக குறித்த பெண் தண்டவாளத்திற்கு அருகில் நின்று தொலைப்பேசி அழைப்பொன்றை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement