• Jun 28 2024

காய்ச்சலுக்கு மருந்தெடுத்த பெண் திடீர் மரணம்! கொழும்புக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள்! யாழில் சம்பவம்

Chithra / Jun 24th 2024, 2:24 pm
image

Advertisement


யாழ்ப்பாணம், சாவற்காட்டு பகுதியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று, மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது .

சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .

குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக, 

22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று, மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். 

பெற்றுக்கொண்ட மருந்தை உட்கொண்ட பின்னர், நேற்று குறித்த பெண்ணின் உடல் நிலை மிக மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காய்ச்சலுக்கு மருந்தெடுத்த பெண் திடீர் மரணம் கொழும்புக்கு அனுப்பப்பட்ட மாதிரிகள் யாழில் சம்பவம் யாழ்ப்பாணம், சாவற்காட்டு பகுதியில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று, மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று (23) இடம்பெற்றுள்ளது .சாவற்காட்டு பகுதியை சேர்ந்த 63 வயதுடைய விஜயகுமார் குணராணி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார் .குறித்த பெண்ணுக்கு கடந்த 20ஆம் திகதி ஏற்பட்ட திடீர் காய்ச்சல் காரணமாக, 22ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று, மருந்தினை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். பெற்றுக்கொண்ட மருந்தை உட்கொண்ட பின்னர், நேற்று குறித்த பெண்ணின் உடல் நிலை மிக மோசமாகி மூச்சுவிட சிரமப்பட்ட நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணின் உடற்கூற்று பரிசோதனைகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டு, மேலதிக பரிசோதனை நடவடிக்கைக்காக மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement