கொழும்பு — வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று சனிக்கிழமை (30) மாலை பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதியுள்ளார்.
இச்சம்பவம் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளவத்தை பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.
விபத்து நடந்த போது அவர் வெள்ளை மற்றும் பழுப்பு (White and Brown) நிறங்கள் கலந்த சேலை அணிந்திருந்ததாகவும், அவரிடம் பச்சை நிறப் பை (Bag) ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போது உயிரிழந்தவரின் சடலம் களுபோவில போதனா மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் பலி கொழும்பு — வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில், ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி நேற்று சனிக்கிழமை (30) மாலை பயணித்த ரயிலில் குறித்த பெண் மோதியுள்ளார். இச்சம்பவம் குறித்துக் கிடைத்த தகவலின் அடிப்படையில் வெள்ளவத்தை பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. விபத்து நடந்த போது அவர் வெள்ளை மற்றும் பழுப்பு (White and Brown) நிறங்கள் கலந்த சேலை அணிந்திருந்ததாகவும், அவரிடம் பச்சை நிறப் பை (Bag) ஒன்று இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.தற்போது உயிரிழந்தவரின் சடலம் களுபோவில போதனா மருத்துவமனையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.