• Oct 18 2024

சேலையுடன் 42.5 கிலோ மீட்டர் தூரம் நெட்டோட்டம் ஓடிய பெண்மணி! samugammedia

Tamil nila / Apr 20th 2023, 8:40 pm
image

Advertisement

சேலை அணிந்து பெண்ணொருவர் நெட்டோட்டம்  ஓடியாமை அனைவராலும் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் பிரிட்டனில் மான்செஸ்டர் நகரிலே  பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதான மதுஸ்மிதா ஜெனா தாஸ் என்பவரே இவ்வாறு சேலை அணிந்து ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். 

அவர் சிவப்பு நிற புடவை மற்றும் ஆரஞ்சு காலணியில் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடுகின்ற புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகியுள்ளது. 

இதனை ஏனைய நாட்டவர்களும் பாராட்டியுள்ளனர். அத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் இருந்து, சேலையில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தும் அவரது முடிவைப் பாராட்டுவது வரை குதூகலித்துள்ளனர். 

ஜெனா தாஸ் சேலை அணிந்து 42.5 கிமீ ஓடியுள்ளதுடன், அதற்காக நான்கு மணிநேரம் 50 நிமிடங்களை எடுத்து கொண்டுள்ளார். 

மான்செஸ்டர் நகரில் ஆசிரியராகப் பணியாற்றும் ஜெனா, உலகின் பல பகுதிகளில் நெட்டோட்டத்தில் முன்னரும் பங்கேற்றியுள்ளார். 

சேலையுடன் ஓடுவதன் மூலம் இந்திய மரபையும் கலாசாரத்தையும் பற்றி மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவரின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.

சேலையுடன் 42.5 கிலோ மீட்டர் தூரம் நெட்டோட்டம் ஓடிய பெண்மணி samugammedia சேலை அணிந்து பெண்ணொருவர் நெட்டோட்டம்  ஓடியாமை அனைவராலும் பெரிதும் பேசப்பட்டு வருகின்றது. இச்சம்பவம் பிரிட்டனில் மான்செஸ்டர் நகரிலே  பதிவாகியுள்ளது. இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 41 வயதான மதுஸ்மிதா ஜெனா தாஸ் என்பவரே இவ்வாறு சேலை அணிந்து ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டுள்ளார். அவர் சிவப்பு நிற புடவை மற்றும் ஆரஞ்சு காலணியில் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடுகின்ற புகைப்படங்கள்  இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை ஏனைய நாட்டவர்களும் பாராட்டியுள்ளனர். அத்துடன் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதில் இருந்து, சேலையில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடத்தும் அவரது முடிவைப் பாராட்டுவது வரை குதூகலித்துள்ளனர். ஜெனா தாஸ் சேலை அணிந்து 42.5 கிமீ ஓடியுள்ளதுடன், அதற்காக நான்கு மணிநேரம் 50 நிமிடங்களை எடுத்து கொண்டுள்ளார். மான்செஸ்டர் நகரில் ஆசிரியராகப் பணியாற்றும் ஜெனா, உலகின் பல பகுதிகளில் நெட்டோட்டத்தில் முன்னரும் பங்கேற்றியுள்ளார். சேலையுடன் ஓடுவதன் மூலம் இந்திய மரபையும் கலாசாரத்தையும் பற்றி மக்களிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது இவரின் நோக்கம் எனவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement