• Sep 20 2024

ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் கிடைத்த பெண்ணின் சடலம்: 3ம் முறையாக தொடரும் சம்பவம்! SamugamMedia

Tamil nila / Mar 14th 2023, 8:22 pm
image

Advertisement

பெங்களூருவில் உள்ள ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெங்களூருவில் உள்ள ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பெங்களூரு ரயில் நிலையத்தில் டிரம்மில் சடலம் கண்டெடுக்கப்பட்ட இச்சம்பவம் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது.


பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே கடந்த திங்கள் கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை பிளாஸ்டிக் டிரம் கிடந்திருக்கிறது. துணியால் மூடப்பட்ட அந்த டிரம்மிலிருந்து துர்நாற்றம் வருவதைக் கண்டு அஞ்சிய பொது மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.காவல் துறை அந்த டிரம்மில் இருப்பது ஒரு பெண்ணின் உடலெனக் கண்டறிந்துள்ளது. மேலும் அப்பெண்ணுக்கு 31 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.



காவல்துறை நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத மூன்று பேர் அந்த பிளாஸ்டிக் டிரம்மை ஆட்டோ ரிக்‌ஷாவில் கொண்டு வந்து ரயில் நிலைய நுழைவாயில் அருகே போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து ரயிலில் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளனர். பெங்களூரு ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சௌம்லதா கூறுகையில், “மச்சிலிப்பட்டினத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் இறந்தவர் யாரென இன்னும் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறியுள்ளார்.


இரண்டு மாதங்களுக்கு முன்பு, யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர்கள் ஜனவரி 4ம் திகதி பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் உடல் சிதைந்த நிலையிலிருந்ததை பார்த்துள்ளனர்.இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், எஸ்எம்விடி ரயில் நிலையத்தில்,  பயணிகள் ரயிலின் பெட்டியில் மஞ்சள் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.


பிற பொருட்களுடன் வீசப்பட்ட சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பயணி ஒருவர் புகார் செய்ததை அடுத்து, மிகவும் சிதைந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்று வழக்குகளிலும், பாதிக்கப்பட்ட பெண் சுமார் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த மூன்று வழக்குகளும் தீர்க்கப்படாமல் உள்ளன, ஆனால் ஒரு தொடர் கொலைகாரன் சம்பந்தப்பட்டிருப்பதாக சம்பவங்களை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் கிடைத்த பெண்ணின் சடலம்: 3ம் முறையாக தொடரும் சம்பவம் SamugamMedia பெங்களூருவில் உள்ள ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூருவில் உள்ள ரயில் நிலையத்தில் பிளாஸ்டிக் டிரம்முக்குள் பெண்ணின் சடலம் கடந்த திங்கட்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பெங்களூரு ரயில் நிலையத்தில் டிரம்மில் சடலம் கண்டெடுக்கப்பட்ட இச்சம்பவம் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடைபெற்றுள்ளது.பையப்பனஹள்ளி ரயில் நிலையத்தின் நுழைவு வாயில் அருகே கடந்த திங்கள் கிழமை காலை 10 மணி முதல் 11 மணி வரை பிளாஸ்டிக் டிரம் கிடந்திருக்கிறது. துணியால் மூடப்பட்ட அந்த டிரம்மிலிருந்து துர்நாற்றம் வருவதைக் கண்டு அஞ்சிய பொது மக்கள் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.காவல் துறை அந்த டிரம்மில் இருப்பது ஒரு பெண்ணின் உடலெனக் கண்டறிந்துள்ளது. மேலும் அப்பெண்ணுக்கு 31 முதல் 35 வயதிற்குள் இருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.காவல்துறை நடத்திய விசாரணையில், அடையாளம் தெரியாத மூன்று பேர் அந்த பிளாஸ்டிக் டிரம்மை ஆட்டோ ரிக்‌ஷாவில் கொண்டு வந்து ரயில் நிலைய நுழைவாயில் அருகே போட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள் எனக் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் மச்சிலிப்பட்டினத்தில் இருந்து ரயிலில் உடல் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்துள்ளனர். பெங்களூரு ரயில்வே போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சௌம்லதா கூறுகையில், “மச்சிலிப்பட்டினத்திற்கு ஒரு குழு அனுப்பப்பட்டுள்ளது, ஆனால் இறந்தவர் யாரென இன்னும் அடையாளம் காண முடியவில்லை எனக் கூறியுள்ளார்.இரண்டு மாதங்களுக்கு முன்பு, யஸ்வந்த்பூர் ரயில் நிலையத்தில் துப்புரவுப் பணியாளர்கள் ஜனவரி 4ம் திகதி பிளாஸ்டிக் டிரம்மில் 30 வயது மதிக்கத்தக்கப் பெண்ணின் உடல் சிதைந்த நிலையிலிருந்ததை பார்த்துள்ளனர்.இதேபோல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், எஸ்எம்விடி ரயில் நிலையத்தில்,  பயணிகள் ரயிலின் பெட்டியில் மஞ்சள் சாக்கு மூட்டையில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.பிற பொருட்களுடன் வீசப்பட்ட சாக்கு பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக பயணி ஒருவர் புகார் செய்ததை அடுத்து, மிகவும் சிதைந்த எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மூன்று வழக்குகளிலும், பாதிக்கப்பட்ட பெண் சுமார் 30 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த மூன்று வழக்குகளும் தீர்க்கப்படாமல் உள்ளன, ஆனால் ஒரு தொடர் கொலைகாரன் சம்பந்தப்பட்டிருப்பதாக சம்பவங்களை விசாரிக்கும் பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement