கண்டியிலுள்ள அழகு நிலையமொன்றில் 7 பெண்கள் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி பெரதெனிய சாலையில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த அழகு நிலையத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏர் கண்டிஷனர் இயங்கிக் கொண்டிருந்தபோது, ஊழியர்கள் ஒரு மூடிய இடத்தில் ஜெனரேட்டரை இயக்க வேண்டி இருந்தது.
ஜெனரேட்டர் இயக்கியதை அடுத்து அழகு நிலையத்திற்குள் இருந்த பெண்கள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.
ஜெனரேட்டரிலிருந்து வந்த நச்சுப் புகை காரணமாகவே குறித்த பெண்கள் சுயநினைவை இழந்து மயங்கி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மயங்கி விழுந்த 7 பெண்களும் சிசிக்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
ஏழு பெண்களில் நான்கு பேர் ஊழியர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அழகு நிலையத்தில் மயங்கிய பெண்கள் கண்டியிலுள்ள அழகு நிலையமொன்றில் 7 பெண்கள் மயங்கி விழுந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்டி பெரதெனிய சாலையில் உள்ள ஒரு அழகு நிலையத்திற்குள் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த அழகு நிலையத்தில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏர் கண்டிஷனர் இயங்கிக் கொண்டிருந்தபோது, ஊழியர்கள் ஒரு மூடிய இடத்தில் ஜெனரேட்டரை இயக்க வேண்டி இருந்தது. ஜெனரேட்டர் இயக்கியதை அடுத்து அழகு நிலையத்திற்குள் இருந்த பெண்கள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர். ஜெனரேட்டரிலிருந்து வந்த நச்சுப் புகை காரணமாகவே குறித்த பெண்கள் சுயநினைவை இழந்து மயங்கி இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். மயங்கி விழுந்த 7 பெண்களும் சிசிக்சைக்காக கண்டி தேசிய மருத்துவமனையிலும், தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். ஏழு பெண்களில் நான்கு பேர் ஊழியர்கள் என்றும் மீதமுள்ளவர்கள் வாடிக்கையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.