பெண்களுக்கு எதிரான பாலின வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கவும் அதனை அணுகுவது தொடர்பான செயலமர்வு திருகோணமலையில் தனியார் ஹோட்டலில் இன்று(22) இடம்பெற்றது.
இதனை திருகோணமலை மாவட்ட செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, ஈவின்ங்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த செயலமர்வானது 08 பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த துறைசார் உத்தியோகத்தர்களுக்காக இடம்பெற்றது.
வளவாளராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி கலந்துகொண்டு பெண்கள் பாலின அடிப்படை அது தொடர்பிலான சம்பவங்கள் நிகழாமை அதனை தடுக்க வேண்டிய அணுகுமுறைகள் உட்பட பல விடயங்களை தெளிவூட்டினார்.
இதில் திருகோணமலை மாவட்ட செயலக பெண்கள் விவகார மாவட்ட இணைப்பாளர் தீபானி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
திருகோணமலையில் பாலின அடிப்படையில் பெண்களுக்கு எதிரான : வன்முறைகளை தடுப்பது தொடர்பான செயலமர்வு பெண்களுக்கு எதிரான பாலின வன்முறைகள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்களை தடுக்கவும் அதனை அணுகுவது தொடர்பான செயலமர்வு திருகோணமலையில் தனியார் ஹோட்டலில் இன்று(22) இடம்பெற்றது. இதனை திருகோணமலை மாவட்ட செயலக பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, ஈவின்ங்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. குறித்த செயலமர்வானது 08 பொலிஸ் பிரிவுகளை சேர்ந்த துறைசார் உத்தியோகத்தர்களுக்காக இடம்பெற்றது.வளவாளராக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி கலந்துகொண்டு பெண்கள் பாலின அடிப்படை அது தொடர்பிலான சம்பவங்கள் நிகழாமை அதனை தடுக்க வேண்டிய அணுகுமுறைகள் உட்பட பல விடயங்களை தெளிவூட்டினார்.இதில் திருகோணமலை மாவட்ட செயலக பெண்கள் விவகார மாவட்ட இணைப்பாளர் தீபானி உட்பட, பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.