• Nov 07 2025

திருகோணமலையில் ஊழல் தடுப்பு எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு!

shanuja / Oct 8th 2025, 4:38 pm
image

திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள் ,உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கான ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மை குறித்த தேசிய நிகழ்ச்சித் தொடர் இன்று (08) திருகோணமலையில் உள்ள  கிழக்கு மாகாண செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 


கிழக்கு மாகாண  ஆளுநர்  பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் இடம் பெற்றது.


இதில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  நாமல் தலங்கம, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் திருமதி. தனுஜா பாலசூரிய, பிரதிப் பிரதம செயலாளர் (பணியாளர் மற்றும் பயிற்சி) திரு. மணிவண்ணன் மற்றும் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,  உள்ளூராக்சி மன்ற செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள்  என பலரும் கலந்து கொண்டனர்.

திருகோணமலையில் ஊழல் தடுப்பு எதிர்ப்பு சட்டம் தொடர்பான செயலமர்வு திருகோணமலை மாவட்ட உள்ளூராட்சிமன்ற தவிசாளர்கள் ,உறுப்பினர்கள் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கான ஊழல் எதிர்ப்பு சட்டம் மற்றும் நேர்மை குறித்த தேசிய நிகழ்ச்சித் தொடர் இன்று (08) திருகோணமலையில் உள்ள  கிழக்கு மாகாண செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண  ஆளுநர்  பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்ச்சித் திட்டம் இடம் பெற்றது.இதில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர்  நாமல் தலங்கம, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் நாயகம் திருமதி. தனுஜா பாலசூரிய, பிரதிப் பிரதம செயலாளர் (பணியாளர் மற்றும் பயிற்சி) திரு. மணிவண்ணன் மற்றும் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர்,  உள்ளூராக்சி மன்ற செயலாளர்கள் மற்றும் உள்ளூராட்சி பிரதிநிதிகள்  என பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement