• Nov 23 2024

இலங்கையிலுள்ள வளம் தொடர்பில் போட்டியில் இறங்கியுள்ள உலக நாடுகள்

Chithra / May 27th 2024, 11:53 am
image

 

இலங்கையின் மூலோபாய சொத்துக்கள் மற்றும் வளங்கள் மீது உலகளாவிய கவனம் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இந்தவகையில் நாட்டின் கிராஃபைட் (graphite) துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான போட்டியில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே இந்த தொழில்துறையில் கனடா அவுஸ்திரேலியா நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே இந்தியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன.

இலங்கையில் உயர்தர காரீயம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி இந்தியா சீனா உட்பட பல வெளிநாடுகள் இந்த துறையில் முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யார் அதிகபட்ட மதிப்புக்கூட்டலில் ஈடுபடுகின்றார்கள்,  மேம்பட்ட தொழில்துறைகளிற்காக பயன்படுத்துகின்றார்கள் என்பதை பார்க்கவேண்டும்.

இலங்கையில் கைவிடப்பட்ட 3000 சுரங்கங்கள் உள்ளன நாங்கள் அதிகமாக கோரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வளம் தொடர்பில் போட்டியில் இறங்கியுள்ள உலக நாடுகள்  இலங்கையின் மூலோபாய சொத்துக்கள் மற்றும் வளங்கள் மீது உலகளாவிய கவனம் காலணித்துவ ஆட்சிக்காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது. இந்தவகையில் நாட்டின் கிராஃபைட் (graphite) துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான போட்டியில் சீனா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே இந்த தொழில்துறையில் கனடா அவுஸ்திரேலியா நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்தியுள்ள நிலையிலேயே இந்தியா சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் முதலீடு செய்வதற்கான ஆர்வத்தை வெளியிட்டுள்ளன.இலங்கையில் உயர்தர காரீயம் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.புவியியல் மற்றும் சுரங்க ஆய்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரஞ்சித் பிரேமசிறி இந்தியா சீனா உட்பட பல வெளிநாடுகள் இந்த துறையில் முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.யார் அதிகபட்ட மதிப்புக்கூட்டலில் ஈடுபடுகின்றார்கள்,  மேம்பட்ட தொழில்துறைகளிற்காக பயன்படுத்துகின்றார்கள் என்பதை பார்க்கவேண்டும்.இலங்கையில் கைவிடப்பட்ட 3000 சுரங்கங்கள் உள்ளன நாங்கள் அதிகமாக கோரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement