நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை இப் புகைப்படக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள் உட்பட, கதை சொல்லும் பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து புகைப்பட கண்காட்சி ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் தூதுவர் கலந்து சிறப்பித்ததுடன், யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நெதர்லாந்து தூதரகத்தினர் மற்று பார்வையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
யாழில் ஆரம்பமானது உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்றையதினம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது. இன்று ஆரம்பமான இந்த கண்காட்சி 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் காலை 10:00 மணி முதல், இரவு 07:00 மணி வரை இப் புகைப்படக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.புகைப்பட ஊடகவியலில் சர்வதேச விருதுகளை வென்ற புகைப்படங்கள் உட்பட, கதை சொல்லும் பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படவுள்ளன.நிகழ்வின் ஆரம்பத்தில் விருந்தினர்கள் தமிழர் பாரம்பரிய முறைப்படி மயிலாட்டம், குதிரையாட்டத்துடன் அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து புகைப்பட கண்காட்சி ஆரம்பமாகியது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதரகத்தின் பிரதித் தூதுவர் தூதுவர் கலந்து சிறப்பித்ததுடன், யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய்முரளி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், நெதர்லாந்து தூதரகத்தினர் மற்று பார்வையாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.