• Nov 23 2024

மகிந்தவுடன் உலகத்தமிழர் பேரவை சந்திப்பு - புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ப்ராம்ப்டன் நகர மேயர்!

Chithra / Dec 29th 2023, 12:46 pm
image


இலங்கைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை சந்தித்து, ஹிமாலயா பிரகடனத்தை கையளித்ததுடன் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தனர், குறித்த சம்பவத்தை பார்த்து தான் அதிர்சியடைந்துள்ளதாகவும், இதை கண்டிப்பதாகவும்  கனடா   பிராம்ப்டன் நகர மேயர் patrick brown தனது  Xதளத்தில்  பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து அவரது பதிவில் மேலும் தெரிவிக்கையில், 

இனப்படுகொலை காரணமாக இலங்கையில் இருந்து தமிழ் கனடியர்கள் வெளியேறியுள்ளனர். 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் இருந்த போதில் இருந்து, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக் கடுமையான குற்றத்திற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக வாதிட்டு வருகிறோம். 


" இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இன்றி அமைதி ஏற்பட முடியாது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆதாரங்களை சேகரித்து, இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைகள் உள்ளிட்ட சாத்தியமான உத்திகளை கோடிட்டுக் காட்டுகிறது. பிராம்ப்டன் நகரமும் கனடாவின் அனைத்து மட்ட அரசுகளும் தமிழர் இனப்படுகொலையை அங்கீகரித்துள்ளன.

எவ்வாறாயினும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு பிரகடனத்தை CTC இன் ஆலோசனைக் குழு உறுப்பினருடன் GTF முன்வைத்தது. 


அது  இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது. நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இலக்குகளுக்கு இது பின்னோக்கி செல்லும் ஒரு படியாக கருதப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்களுக்காக கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள போர்க்குற்றவாளியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுடன் இதே CTC உறுப்பினர் புகைப்படம் எடுத்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

GTF மற்றும் CTC யின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் தமிழ் கனேடிய அமைப்புகளும் கனேடிய அரசாங்கமும் சரியான தார்மீக தளத்தை தெரிவு செய்யும் என எதிர்பார்க்கின்றேன். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மகிந்தவுடன் உலகத்தமிழர் பேரவை சந்திப்பு - புகைப்படத்தை பார்த்து அதிர்ந்த ப்ராம்ப்டன் நகர மேயர் இலங்கைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்கள், தமிழ் இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவை சந்தித்து, ஹிமாலயா பிரகடனத்தை கையளித்ததுடன் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டிருந்தனர், குறித்த சம்பவத்தை பார்த்து தான் அதிர்சியடைந்துள்ளதாகவும், இதை கண்டிப்பதாகவும்  கனடா   பிராம்ப்டன் நகர மேயர் patrick brown தனது  Xதளத்தில்  பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவரது பதிவில் மேலும் தெரிவிக்கையில், இனப்படுகொலை காரணமாக இலங்கையில் இருந்து தமிழ் கனடியர்கள் வெளியேறியுள்ளனர். 2009 இல் இனப்படுகொலை உச்சக்கட்டத்தில் இருந்த போதில் இருந்து, தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மிகக் கடுமையான குற்றத்திற்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக வாதிட்டு வருகிறோம். " இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் இன்றி அமைதி ஏற்பட முடியாது.ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை ஆதாரங்களை சேகரித்து, இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான விசாரணைகள் உள்ளிட்ட சாத்தியமான உத்திகளை கோடிட்டுக் காட்டுகிறது. பிராம்ப்டன் நகரமும் கனடாவின் அனைத்து மட்ட அரசுகளும் தமிழர் இனப்படுகொலையை அங்கீகரித்துள்ளன.எவ்வாறாயினும், தமிழ் மக்களின் அபிலாஷைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு பிரகடனத்தை CTC இன் ஆலோசனைக் குழு உறுப்பினருடன் GTF முன்வைத்தது. அது  இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு பிணை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டது. நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகிய இலக்குகளுக்கு இது பின்னோக்கி செல்லும் ஒரு படியாக கருதப்பட வேண்டும்.தமிழ் மக்களுக்கு எதிரான மிகக் கடுமையான குற்றங்களுக்காக கனடாவில் தடைசெய்யப்பட்டுள்ள போர்க்குற்றவாளியும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவுடன் இதே CTC உறுப்பினர் புகைப்படம் எடுத்தது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.GTF மற்றும் CTC யின் இந்த செயலை நான் வன்மையாக கண்டிக்கிறேன். தமிழ் மக்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் தமிழ் கனேடிய அமைப்புகளும் கனேடிய அரசாங்கமும் சரியான தார்மீக தளத்தை தெரிவு செய்யும் என எதிர்பார்க்கின்றேன். என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement