• Sep 20 2024

உலகின் முதல் மாற்றுப்பாலின நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார்! SamugamMedia

Chithra / Mar 6th 2023, 4:46 pm
image

Advertisement

உலகின் முதல் மாற்றுப்பாலின நாடாளுமன்ற உறுப்பினரும், மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த சட்டத்தரணியுமான ஜோர்ஜினா பேயர் காலமானார்.

நியூஸிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் தனது 65ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜோர்ஜினா பேயர் நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காலமானார்.


ஜோர்ஜினா பேயர் மாற்றுப்பாலினத்தவர்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்தவர் என்பதுடன், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறைமை பற்றியும் பலமுறை நியூஸிலாந்து நாடாளுமன்றில் விவாதித்துள்ளார்.

முன்னாள் பாலியல் தொழிலாளியும் நடிகையுமான பேயர், நியூஸிலாந்தின் வடக்கு தீவில் உள்ள நகரமான கார்டெர்டனின் முதல்வராக பதவி வகித்திருந்தார்.


பல ஆண்டுகளுக்குப் பிறகு 1999ஆம் ஆண்டில் நியூஸிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2007ஆம் ஆண்டு வரை தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

உலகின் முதல் மாற்றுப்பாலின நாடாளுமன்ற உறுப்பினர் காலமானார் SamugamMedia உலகின் முதல் மாற்றுப்பாலின நாடாளுமன்ற உறுப்பினரும், மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுத்த சட்டத்தரணியுமான ஜோர்ஜினா பேயர் காலமானார்.நியூஸிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினரான இவர் தனது 65ஆவது வயதில் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜோர்ஜினா பேயர் நீண்டகாலமாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் காலமானார்.ஜோர்ஜினா பேயர் மாற்றுப்பாலினத்தவர்களின் பிரச்சினைகள் மற்றும் உரிமைகளுக்காக அயராது குரல் கொடுத்தவர் என்பதுடன், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை முறைமை பற்றியும் பலமுறை நியூஸிலாந்து நாடாளுமன்றில் விவாதித்துள்ளார்.முன்னாள் பாலியல் தொழிலாளியும் நடிகையுமான பேயர், நியூஸிலாந்தின் வடக்கு தீவில் உள்ள நகரமான கார்டெர்டனின் முதல்வராக பதவி வகித்திருந்தார்.பல ஆண்டுகளுக்குப் பிறகு 1999ஆம் ஆண்டில் நியூஸிலாந்து நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2007ஆம் ஆண்டு வரை தொழிலாளர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார்.

Advertisement

Advertisement

Advertisement