• Mar 31 2025

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்

Chithra / Nov 20th 2024, 10:29 am
image

  

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் நேற்று கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.

குறித்த விமானமானது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றாகும்.

இந்தநிலையில், அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளுக்காக இந்த விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த நடவடிக்கைகளின் பின்னர் விமானம் மீண்டும் கட்டாரின் தோஹா நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய உலகின் மிகப்பெரிய விமானம்   உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றான எயார்பஸ் ஏ380 (Airbus A380) விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.கட்டார் விமான சேவைக்கு சொந்தமான குறித்த விமானம் நேற்று கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.குறித்த விமானமானது உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானங்களில் ஒன்றாகும்.இந்தநிலையில், அவுஸ்திரேலியாவின் சிட்னி விமான நிலையத்தில் இருந்து எரிபொருள் நிரப்பும் நடவடிக்கைகளுக்காக இந்த விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நடவடிக்கைகளின் பின்னர் விமானம் மீண்டும் கட்டாரின் தோஹா நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now