• Sep 10 2024

தாய்மாமனை இழந்த கவலை - யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு..!

Sharmi / Aug 13th 2024, 9:10 pm
image

Advertisement

யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகத்தில் மருமகன் ஒருவர்  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞனின் தாய்மாமன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் மனவிரக்தியில் இருந்துள்ளார். 

இந்நிலையில், குறித்த இளைஞன் இன்றையதினம்(13) தனது வீட்டுக்கு பின்னால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். 

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். 

இதனையடுத்து இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்மாமனை இழந்த கவலை - யாழில் இளைஞன் எடுத்த விபரீத முடிவு. யாழில் தாய்மாமன் உயிரிழந்த சோகத்தில் மருமகன் ஒருவர்  தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,குறித்த இளைஞனின் தாய்மாமன் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் குறித்த இளைஞன் மனவிரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், குறித்த இளைஞன் இன்றையதினம்(13) தனது வீட்டுக்கு பின்னால் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். இதனையடுத்து இளைஞனின் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement