• Sep 20 2024

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை? அழுகிய நிலையில் ஓன்றரை வயது குழந்தையின் கை! samugammedia

Tamil nila / Jul 2nd 2023, 9:17 pm
image

Advertisement

சென்னை சென்ட்ரல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் அஜிஷா தம்பதிகளின் ஒன்றரை வயது மகன் முகமது மகாதீர் என்ற குழந்தைக்கு கடந்த ஒன்றரை வருடம் முன்பு தலையில் நீர் கோர்ப்பதாக ஆபரேஷன் செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரச்சினை வரவே குழந்தையை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையின் கையில் ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பகுதியில் கை கருப்பாக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் குழந்தையின் தாய் தந்தை தெரிவித்துள்ளனர்.

இது சிறிது சிறிதாக பெரிய அளவில் கை முழுவதும் ஏற்பட்டுள்ளது.

இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் குழந்தையின் கை அழுகிய நிலையில் ஆகியதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்

குழந்தையின் கையை அகற்றினால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் இல்லையேல் குழந்தை உயிர் இழக்க நேரிடும் என்றும் மருத்துவ நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனால் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து துறைமுகம் காவல்துறை உதவி ஆணையர் வீரக்குமார் மற்றும் மருத்துவமனை காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை எக்மோரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி மேல்மருத்துவம் பார்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குழந்தைக்கு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்களிடம் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பாக மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் ஆம்புலன்ஸில் குழந்தையை எக்மோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மருத்துவமனையில் முதல்வர் தேரணி ராஜன் வந்து குழந்தையின் மருத்துவ அறிக்கையை பார்த்து குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைக்கு சில குறைபாடுகள் உள்ளதாகவும் அதற்காக தலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கை அழுகியதற்காக விசாரணை கமிஷன் மருத்துவமனையில் அமைக்கப்படும் என்று தெரிவித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.

இதனால் சிறிது நேரம் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பரபரப்பான நிலை ஏற்பட்டதாக ஹெரிவிக்கப்படுகிறது


அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அழுகிய நிலையில் ஓன்றரை வயது குழந்தையின் கை samugammedia சென்னை சென்ட்ரல் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தினமும் 1000க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.ராமநாதபுரத்தை சேர்ந்த தஸ்தகீர் அஜிஷா தம்பதிகளின் ஒன்றரை வயது மகன் முகமது மகாதீர் என்ற குழந்தைக்கு கடந்த ஒன்றரை வருடம் முன்பு தலையில் நீர் கோர்ப்பதாக ஆபரேஷன் செய்து அழைத்துச் சென்றுள்ளனர்.கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பிரச்சினை வரவே குழந்தையை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு குழந்தையின் கையில் ஏற்றப்பட்ட குளுக்கோஸ் பகுதியில் கை கருப்பாக செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களிடம் குழந்தையின் தாய் தந்தை தெரிவித்துள்ளனர்.இது சிறிது சிறிதாக பெரிய அளவில் கை முழுவதும் ஏற்பட்டுள்ளது.இதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் தான் குழந்தையின் கை அழுகிய நிலையில் ஆகியதாக குழந்தையின் பெற்றோர் மற்றும் குழந்தையின் உறவினர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்குழந்தையின் கையை அகற்றினால் தான் குழந்தையை காப்பாற்ற முடியும் இல்லையேல் குழந்தை உயிர் இழக்க நேரிடும் என்றும் மருத்துவ நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதனால் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து துறைமுகம் காவல்துறை உதவி ஆணையர் வீரக்குமார் மற்றும் மருத்துவமனை காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை எக்மோரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி மேல்மருத்துவம் பார்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக குழந்தைக்கு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்களிடம் தெரிவித்தனர்.மேலும் இது தொடர்பாக மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் ஆம்புலன்ஸில் குழந்தையை எக்மோர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு மருத்துவமனையில் முதல்வர் தேரணி ராஜன் வந்து குழந்தையின் மருத்துவ அறிக்கையை பார்த்து குழந்தை குறை பிரசவத்தில் பிறந்ததால் குழந்தைக்கு சில குறைபாடுகள் உள்ளதாகவும் அதற்காக தலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கை அழுகியதற்காக விசாரணை கமிஷன் மருத்துவமனையில் அமைக்கப்படும் என்று தெரிவித்ததால் உறவினர்கள் கலைந்து சென்றனர்.இதனால் சிறிது நேரம் அரசு ராஜீவ்காந்தி மருத்துவமனை பரபரப்பான நிலை ஏற்பட்டதாக ஹெரிவிக்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement