தம்புள்ளை, யாபாகம பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணமான மூன்றே மாதங்களில் நிகழ்ந்த இந்தத் துயரம் அனைவரையும் நிலைகுலையச் செய்துள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
யாபாகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும், அவரது 22 வயதுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் திருமணத்தின் பின்னர் கம்பஹா பகுதியில் உள்ள உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததுடன் அங்கேயே வாடகை வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர்.
விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு வந்திருந்த தம்பதியினர், மீண்டும் தமது பணிக்காக மோட்டார் சைக்கிளில் கம்பஹா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இதன்போது, கண்டி - கொழும்பு பிரதான வீதியின் வதுபிடிவல பகுதியில் இவர்களது மோட்டார் சைக்கிள் பஸ் ஒன்றுடன் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
உயிரிழந்த இளம் தம்பதியினரின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாபாகம பொது மயானத்தில் இடம்பெற்றன. இதில் பெருந்திரளான உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்.
"இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தும் போது தமது உயிரின் பெறுமதியை உணர்ந்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்" என்று கிராம மக்கள் கவலையுடன் இதன்போது தெரிவித்தனர்.
திருமணமான 3 மாதங்களில் விபத்தில் இளம் தம்பதியினர் பரிதாப மரணம்; தம்புள்ளையில் சோகம் தம்புள்ளை, யாபாகம பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினர் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான மூன்றே மாதங்களில் நிகழ்ந்த இந்தத் துயரம் அனைவரையும் நிலைகுலையச் செய்துள்ளது.இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-யாபாகம பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரும், அவரது 22 வயதுடைய மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவர்கள் திருமணத்தின் பின்னர் கம்பஹா பகுதியில் உள்ள உணவு விநியோக நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்ததுடன் அங்கேயே வாடகை வீடொன்றில் தங்கியிருந்துள்ளனர்.விடுமுறைக்காக தம்புள்ளையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு வந்திருந்த தம்பதியினர், மீண்டும் தமது பணிக்காக மோட்டார் சைக்கிளில் கம்பஹா நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தனர். இதன்போது, கண்டி - கொழும்பு பிரதான வீதியின் வதுபிடிவல பகுதியில் இவர்களது மோட்டார் சைக்கிள் பஸ் ஒன்றுடன் மோதியதில், இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.உயிரிழந்த இளம் தம்பதியினரின் இறுதிக்கிரியைகள் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் யாபாகம பொது மயானத்தில் இடம்பெற்றன. இதில் பெருந்திரளான உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினர்."இளைஞர்கள் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தும் போது தமது உயிரின் பெறுமதியை உணர்ந்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும்" என்று கிராம மக்கள் கவலையுடன் இதன்போது தெரிவித்தனர்.