ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை முதலையொன்று இழுத்துச் சென்ற நிலையில் அவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலையொன்று இளம் குடும்பஸ்தரை நேற்று மாலை இழுத்துச் சென்றிருந்தது.
இந்நிலையில் மறுநாளான இன்று (6) காலை மீண்டும் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாயமான இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமற் போன இளம் குடும்பஸ்தர் முதலை கடித்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஒலுவில் அஸ்ரப் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய அப்துல் குத்தூஸ் றமீஸ் என்பவர் ஆவார.
குறித்த ஆற்றில் மூவர் மீன்பிடிக்க சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மேலும் மீட்கப்பட்ட சடலத்தின் மீதான மரண விசாரணை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கிணங்க, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு; அம்பாறையில் துயரம் ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இளம் குடும்பஸ்தரை முதலையொன்று இழுத்துச் சென்ற நிலையில் அவர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அம்பாறை மாவட்டம் ஒலுவில் ஆத்தியடிக்கட்டு ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென முதலையொன்று இளம் குடும்பஸ்தரை நேற்று மாலை இழுத்துச் சென்றிருந்தது.இந்நிலையில் மறுநாளான இன்று (6) காலை மீண்டும் தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாயமான இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.காணாமற் போன இளம் குடும்பஸ்தர் முதலை கடித்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஒலுவில் அஸ்ரப் நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய அப்துல் குத்தூஸ் றமீஸ் என்பவர் ஆவார.குறித்த ஆற்றில் மூவர் மீன்பிடிக்க சென்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேலும் மீட்கப்பட்ட சடலத்தின் மீதான மரண விசாரணை அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளிற்கிணங்க, திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச்.அல்-ஜவாஹிர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டு, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.