யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார்.
உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே மேற்படி காணாமல் போனவராவார்.
நேற்று பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு சென்றுள்ளார்.
கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது.
இளைஞனுடன் நீராடிய மேலும் இரு இளைஞர்களை மருதங்கேணி பொலிசார் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுடன் கடலில் நீராடிய இளைஞன் மாயம்; வடமராட்சிக் கடலில் நடந்த சோக சம்பவம் யாழ் வடமராட்சி கிழக்கு தாளையடி கடலில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்த இளைஞன் ஒருவர் கடலோடு அடித்துச் செல்லப்பட்டு மாயமாகியுள்ளார். உடுத்துறையை சேர்ந்த உதைபந்தாட்ட வீரரான 27 வயதுடைய ஜெசிந்தன் என்பவரே மேற்படி காணாமல் போனவராவார்.நேற்று பிற்பகல் தனது நண்பர்களுடன் கடலில் நீராடுவதற்காக அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் தாளையடி கடற்கரைக்கு சென்றுள்ளார்.கடற்பகுதியில் நிலவும் சீரற்ற காற்று மற்றும் கடல் கொந்தளிப்பால் குறித்த இளைஞன் கடலோடு அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது. இளைஞனுடன் நீராடிய மேலும் இரு இளைஞர்களை மருதங்கேணி பொலிசார் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.