• Apr 03 2025

வாகன விபத்தில் இளம் காவல்துறை உத்தியோகத்தர் சாவு..!

Chithra / Jan 25th 2024, 8:12 am
image

 

திஸ்ஸமஹாராம - கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் இளம் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

திஸ்ஸமஹாராம கதிர்காமம் வீதியில் புஞ்சி சாரகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று இரட்டைக் கோடு விதிகளை மீறி, 

அதே திசையில் சென்ற லொறியை முந்திச் செல்லும் போது, ​​எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற இளம் காவல்துறை உத்தியோகத்தர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

கதிர்காமம் காவல்துறை பிரிவில் கடமையாற்றும் 22 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

வாகன விபத்தில் இளம் காவல்துறை உத்தியோகத்தர் சாவு.  திஸ்ஸமஹாராம - கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றினால் இளம் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.திஸ்ஸமஹாராம கதிர்காமம் வீதியில் புஞ்சி சாரகொட பிரதேசத்தில் தனியார் பேருந்து ஒன்று இரட்டைக் கோடு விதிகளை மீறி, அதே திசையில் சென்ற லொறியை முந்திச் செல்லும் போது, ​​எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், விபத்துக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பின்னால் சென்ற இளம் காவல்துறை உத்தியோகத்தர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.கதிர்காமம் காவல்துறை பிரிவில் கடமையாற்றும் 22 வயதுடைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now