மாத்தறை - கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத, ஆசிரியை என தெரியவந்துள்ளது.
குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.
கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி, பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றை, பொலிஸார் பெண்ணின் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.
கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் சரியான தகவல்கள் வௌியாகாத நிலையில்,
கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் ஆசிரியை - சிக்கிய மூத்த சகோதரன் மாத்தறை - கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் ஆசிரியை ஒருவர் கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவம் இன்று அதிகாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத, ஆசிரியை என தெரியவந்துள்ளது.குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இந்த கொலை நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வௌியிட்டுள்ளனர்.கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இருப்பினும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி, பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றை, பொலிஸார் பெண்ணின் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர்.கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் சரியான தகவல்கள் வௌியாகாத நிலையில்,கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.