• Oct 15 2026

வீட்டில் சடலமாக கிடந்த இளம் ஆசிரியர்! மரணத்தில் நீடிக்கும் மர்மம்!

Chithra / Oct 14th 2026, 12:21 pm
image


அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய வரலாற்றுப் பாட ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


ஆனால், அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


இதனையடுத்து, ஆசிரியரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.


மேலும், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.


ஆசிரியரின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இதேவேளை  அனுராதபுரம், நொச்சியாகம பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் நேற்று  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


காலையில் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த பெற்றோர் மதியம் வீடு திரும்பிய வேளையில், வீட்டின் அறையொன்றில் மேற்படி யுவதி உயிரிழந்த நிலையில் காணப்பட்டமையையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.


சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் யுவதியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.


யுவதி சடலமாகக் காணப்பட்ட அறையிலிருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டமையால், அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


பெற்றோருடன் ஏற்பட்ட குடும்ப வாய்த்தர்க்கம் காரணமாக, கடந்த சில நாள்களாக மேற்படி யுவதி பெற்றோருடன் பேசாமல் இருந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


வீட்டில் சடலமாக கிடந்த இளம் ஆசிரியர் மரணத்தில் நீடிக்கும் மர்மம் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் பெலியத்தை பகுதியில் ஆசிரியர் ஒருவரின் மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நேற்று மாலை தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உயிரிழந்தவர் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 31 வயதுடைய வரலாற்றுப் பாட ஆசிரியர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.ஆனால், அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதால் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இதனையடுத்து, ஆசிரியரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.மேலும், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளிடமும் பொலிஸார் வாக்குமூலங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.ஆசிரியரின் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இதேவேளை  அனுராதபுரம், நொச்சியாகம பகுதியில் வீட்டில் தனிமையில் இருந்த 21 வயதுடைய இளம் யுவதி ஒருவர் நேற்று  உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.காலையில் வைத்தியசாலைக்குச் சென்றிருந்த பெற்றோர் மதியம் வீடு திரும்பிய வேளையில், வீட்டின் அறையொன்றில் மேற்படி யுவதி உயிரிழந்த நிலையில் காணப்பட்டமையையடுத்து இந்தச் சம்பவம் தொடர்பில் அயலவர்களின் உதவியுடன் பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் யுவதியின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.யுவதி சடலமாகக் காணப்பட்ட அறையிலிருந்து மாத்திரைகள் கைப்பற்றப்பட்டமையால், அவர் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விழுங்கி உயிரை மாய்த்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.பெற்றோருடன் ஏற்பட்ட குடும்ப வாய்த்தர்க்கம் காரணமாக, கடந்த சில நாள்களாக மேற்படி யுவதி பெற்றோருடன் பேசாமல் இருந்துள்ளமை பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement