• Feb 11 2025

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது..!

Sharmi / Feb 11th 2025, 4:14 pm
image

வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகரவின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையிலான பொலிஸார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது வவுனியா, தோணிக்கல் பகுதியில் 34 வயதுடைய இளைஞர் ஒருவர் 2 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து கஞ்சா மீட்கப்பட்டதுடன் குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

வவுனியாவில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் கைது. வவுனியா, தோணிக்கல் பகுதியில் 2 கிலோ கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சமந்த விஜசேகரவின் ஆலோசனையில், வவுனியா மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அவர்களின் வழிநடத்தலில், வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி அழகியவண்ண தலைமையிலான பொலிஸார் விசேட நடவடிக்கையினை மேற்கொண்டிருந்தனர்.இதன்போது வவுனியா, தோணிக்கல் பகுதியில் 34 வயதுடைய இளைஞர் ஒருவர் 2 கிலோ கஞ்சாவினை உடைமையில் வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து கஞ்சா மீட்கப்பட்டதுடன் குறித்த இளைஞரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement