• Apr 27 2026

மட்டக்குளியில் இளைஞர் கடத்திக் கொடூரக் கொலை- 5 சந்தேகநபர்கள் கைது!

Ziya / Apr 27th 2026, 2:59 pm
image

கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து நீரில் மூழ்கடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.


கடந்த 22ஆம் திகதி மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நபர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.


இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடத்தப்பட்டவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் நீரில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.


ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. 


இதன்போது, இந்தக் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் அதிரடிப் படையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டனர்.


இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு - 15 மற்றும் பமுணுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். 


அவர்கள் அனைவரும் விளக்கமறியலில் இக்கொலைக்கான உண்மையான பின்னணி என்ன? தனிப்பட்ட பகை காரணமாக இக்கொலை நடந்ததா? அல்லது போதைப்பொருள் விவகாரங்கள் ஏதும் பின்னணியில் உள்ளனவா? என்பது குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மட்டக்குளியில் இளைஞர் கடத்திக் கொடூரக் கொலை- 5 சந்தேகநபர்கள் கைது கொழும்பு, மட்டக்குளி பகுதியில் இளைஞர் ஒருவரைக் கடத்திச் சென்று, கழுத்தை நெரித்து நீரில் மூழ்கடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேகநபர்களை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.கடந்த 22ஆம் திகதி மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வைத்து நபர் ஒருவர் இனந்தெரியாதவர்களால் மர்மமான முறையில் கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கடத்தப்பட்டவர் கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் நீரில் மூழ்கடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.ஸ்ரீ ஜயவர்தனபுர விசேட அதிரடிப் படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்றுமுன்தினம் சனிக்கிழமை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, இந்தக் கொலைச் சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்கள் அதிரடிப் படையினரால் சுற்றிவளைத்துக் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு - 15 மற்றும் பமுணுகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 23 முதல் 36 வயதுக்கு உட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும் விளக்கமறியலில் இக்கொலைக்கான உண்மையான பின்னணி என்ன தனிப்பட்ட பகை காரணமாக இக்கொலை நடந்ததா அல்லது போதைப்பொருள் விவகாரங்கள் ஏதும் பின்னணியில் உள்ளனவா என்பது குறித்து மட்டக்குளி பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement